அழுந்தூர்வேள் திதியன்

அழுந்தூர்வேள் திதியன் என்பவன் அழுந்தூர் என்னும் ஊரை ஆண்ட வேள் குலத்தை சேர்ந்தவன். இவனின் மகளே கரிகாலன் என்ற சோழ மன்னனின் அன்னையாவாள்.[1] இந்த அழுந்தூர் தற்கால மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூராகும்.[2]இதுவே கம்பர் பிறந்த ஊருமாகும்.

மேற்கோள்

தொகு
  1. தொல்காப்பியம்-பொருளதிகாரம் நாச்சினார்க்கினியார் உரை
  2. நாராயண சாமி ஐயர், நற்றினை உரை - 180
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழுந்தூர்வேள்_திதியன்&oldid=2566221" இலிருந்து மீள்விக்கப்பட்டது