அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
ஜிவிகே அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (இ.எம்.ஆர்.ஐ./எம்ரி/EMRI/GVK Emergency Management And Research Institute) என்பது இந்தியாவில் இயங்கும் பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டமைப்பில் உருவான அவசரகால உதவி வழங்கும் பொதுச் சேவை நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனம் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிறுவனத்திற்கு எல்லா தொழில்நுட்ப உதவிகளையும் மகேந்திரா சத்யம் நிறுவனம் வழங்குகின்றது.
இந்த நிறுவனம் 15 ஆகஸ்ட் 2005 அன்று 1-0-8 சேவையை ஆந்திர மாநிலம் ஐதராபாத் நகரத்தில் ஆரம்பித்தது.
1-0-8 சேவை
தொகு1-0-8 (நூற்றி எட்டு) என்பது அவசர கால அழைப்புக்கான கட்டணம் இல்லாத இலவசத் தொலைபேசி எண் ஆகும்.
அவசர கால மருத்துவ, காவல் துறை மற்றும் தீ விபத்து உதவிகளுக்கு 108 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்தச் சேவை எல்லா நாட்களிலும 24 மணி நேரமும் செயல்படும்.
இந்தச் சேவை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கோவா, குசராத், மத்தியப் பிரதேசம், இராசத்தான், உத்தரகண்ட், அசாம், மேகாலயா ஆகிய இந்திய மாநிலங்களில் செயல்படுகிறது.