அவசரச் சட்டம் (இந்தியா)
அவசரச் சட்டம் என்பது இந்திய நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் நடைபெறாத நேரங்களில் குடியரசுத் தலைவராலோ அல்லது மாநில ஆளுநராலோ பிறப்பிக்கப்படும் சட்டமாகும். இச்சட்டங்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களால் பிறப்பிக்கப்படும் சட்டத்தைப் போன்றவை. ஆனால் இச்சட்டங்களுக்கு 6 வாரத்திற்குள் அல்லது 60 நட்களுக்குள்[1] நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களின் ஏற்பைப் பெற வேண்டும். [2]
மோதி அரசின் அவசரச் சட்டங்கள்
தொகுஇந்தியாவில் மே 26, 2014 முதல் நரேந்திர மோதி தலைமையிலான அரசு செயல்படத் தொடங்கியது. 20 சனவரி , 2015 வரை , 8 முறைஅவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.அவற்றுள் சில [3]
- காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரிப்பது.
- மருத்துவ உபகரணங்கள் உற்பத்தித்துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டைஅனுமதிப்பது.
- நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தங்கள்.
- முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்களை மீண்டும் ஏலம் விட.
மேற்கோள்கள்
தொகு- ↑ "அவசரச் சட்டம் : குடியரசுத் தலைவர் ஒப்புதல்". புதிய தலைமுறை இம் மூலத்தில் இருந்து 2013-03-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130331054613/http://puthiyathalaimurai.tv/emergency-act-implement. பார்த்த நாள்: ஏப்ரல் 30, 2013.
- ↑ ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாட நூல். தமிழ்நாட்டுப் பாட நூல் கழகம். 2012. p. 215.
- ↑ "அவசரச்சட்ட வழியை கைவிட வேண்டும் மோடி அரசுக்கு ஜனாதிபதி புத்திமதி". தீக்கதிர். 20 சனவரி 2015. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 20 சனவரி 2015.