அவலூர்பேட்டை

அவலூர்பேட்டை (Avalurpet) விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக்கோட்டையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்[1].

தொழில்

தொகு

இவ்வூரின் முதன்மைத்தொழிலாக வேளாண்மை அமைகிறது. மேலும் இங்கு நெசவும் தச்சுவேலைகளும் வேளாண்மை சார்ந்த கருவிகளைச் செய்யும் கைத்தொழில்களும் நடைபெற்று வருகின்றன.

ஊரின் சிறப்பு

தொகு

மும்மதத்தவர்களும் பல்வேறு இனத்தவர்களூம் வாழ்ந்து வந்தாலும் ஒற்றுமையின் சிறப்பினை உணந்து,ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து,ஊருக்குப் பெருமை சேர்க்கிறார்கள்.

சித்தகிரி முருகன் கோயில் சிறப்பு மிக்கது,அதிலும் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நிகழும் பங்குனி உத்திர திருவிழாவும் அதில் சாதிமத பேதமின்றி பங்குபெரும் ஊர்மக்களின் ஈடுபாடும் அனைவராலும் மிகப் போற்றதக்கது.மேலும் பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் ஒவ்வொரு நாளிலும் சிறப்புமிக்க தமிழ்ப்பேச்சாளர்கள்,பாடகர்கள்,பல்வேறு திறன்படைத்த கலைஞர்களையும் பங்குபெறச் செய்வது மேன்மேலும் அவலூர்பேட்டைக்கு பெருமை சேர்க்கிறது.இத்திருவிழவைக்காண சுற்றிலுமுள்ள ஏறத்தாழ 50 ஊர்களின் மக்கள் கண்டுகளித்து பயன்பெறுகிறார்கள்.

இப்பதிவைக்காணும் தாங்களும் அத்திருநாளில் வருகைதந்து கண்டுகளித்து சித்தகிரி முருகன் அருளை பெறுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவலூர்பேட்டை&oldid=3850509" இலிருந்து மீள்விக்கப்பட்டது