அவிசென்னா பரிசு
அவிசென்னா பரிசு (Avicenna Prize) அறிவியலில் நெறிமுறைகளுக்காக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. மேலும் அறிவியலில் நெறிமுறைத் துறையில் தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் வெகுமதி அளிக்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் எழுப்பப்படும் பிரச்சினைகள் குறித்து நெறிமுறை பிரதிபலிப்பை ஊக்குவிப்பதும், அறிவியலில் நெறிமுறைகளின் முக்கியத்துவம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த விருதின் நோக்கமாகும். இந்தப் பரிசு 11ஆம் நூற்றாண்டின் பாரசீக மருத்துவரும் தத்துவஞானியுமான இப்னு சீனா பெயரால் அழைக்கப்படுகிறது.[1]
அவிசென்னா பரிசு | |
---|---|
விருது வழங்குவதற்கான காரணம் | அறிவியலில் நெறிமுறைகளுக்கான பங்களிப்புகள் |
நாடு | ஈரான் |
வழங்குபவர் | ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் |
வெகுமதி(கள்) | தங்கப் பதக்கம், சான்றிதழ், US$10,000 மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசு க்கு ஒரு வார கல்விப் பயணம். |
முதலில் வழங்கப்பட்டது | 2003 |
பரிசு பெற்றவர்களின் எண்ணிக்கை | 5 பரிசுக 5 அறிஞர்கள் (as of 2021[update]) |
இணையதளம் | en |
இந்தப் பரிசு தங்கப் பதக்கம், சான்றிதழ், 10,000 அமெரிக்க டாலர் மற்றும் ஈரான் இசுலாமியக் குடியரசிற்கு ஒரு வாரக் கல்விப் பயணம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இது நிறுவப்பட்டதிலிருந்து, இந்த விருது ஐந்து நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- 2004 மார்கரெட் சோமர்வில், கனடா
- 2006 அப்தல்லா தார், கனடா
- 2010 ரென்சோங் கியு, சீனா
- 2015 ஜாப்தா கான் சின்வாரி, பாக்கித்தான்
- 2019 டொனால்ட் ஏ. பிரவுன், அமெரிக்கா
மேற்கோள்கள்
தொகு- ↑ "Avicenna Prize for Ethics in Science - Ministry of Science Research and Technology". Ministry of Science Research and Technology (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-21.