அவுட்சோர்ஸ்டு (திரைப்படம்)

அவுட்சோர்ஸ்டு (Outsourced) ஜான் ஜெஃப்கோட் என்பவர் இயக்கிய 2006 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை கலந்த ஒரு காதல் கதையை மையமாக கொண்ட ஒரு அமெரிக்கத் திரைப்படம்.

அவுட்சோர்ஸ்டு
"அவுட்சோர்ஸ்டு" திரைப்படத்தின் விளம்பர சுவரொட்டி.
இயக்கம்ஜான் ஜெஃப்கோட்
தயாரிப்புடாம் கொராய்
க்வீன் பையலிக்
டேவிட் ஸ்கின்னர்
ஜார்ஜ் விங்
கதைஜார்ஜ் விங்
ஜான் ஜெஃப்கோட்
இசைBC ஸ்மித்
நடிப்புஜோஷ் ஹேமில்டன்
ஆயிஷா தர்க்கார்
ஆசிப் பஸ்ரா
அர்ஜுன் மதூர்
சித்தார்த் ஜாதவ்
ஒளிப்பதிவுடியோடோரோ மணியாகி
படத்தொகுப்புபிரையன் பெர்டன்
விநியோகம்ஷாடோவ் கேச்சர் எண்டர்டெயின்மென்ட்
வெளியீடுசெப்டம்பர் 12, 2006
ஓட்டம்103 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$703,042 (உலகளாவிய)

கதைச் சுருக்கம் தொகு

டோட் ஆண்டர்சன் (ஜோஷ் ஹேமில்டன்) என்கிற இவர் தான் கதையின் நாயகன் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் டோட் மற்றும் அவரது குழுவும் அவுட் சோர்சிங் எனப்படும் ஒப்பந்த சேவை அமர்த்தம் வாயிலாக இந்தியாவில் பணியமர்த்தப்படுகிறார். இந்த பணி நிமித்தமாக இந்தியாவிற்கு வருகை தரும் டோட் இந்திய கலாச்சாரம் கண்டு வியப்படைகிறார். தொடர் வண்டி ஒன்றை நேரத்திற்கு பிடிக்கும் காரணத்திற்காக வாடகை வாகனம் ஒன்றினை அமர்த்த முயற்சி முதற்கொண்டு அனைத்திலும் குழப்பம் அடைகிறார்.

டோட் இந்தியாவிற்கு வேலை நிமித்தம் வந்ததும் அவரை வரவேற்க புரோ (ஆசிப் பஸ்ரா) வருகிறார். அங்கு அவரை வரவேற்று பணியிடத்திற்கு அழைத்துசெல்லும் புரோ, ஆஷா (ஆயிஷா தர்க்கார்) உட்பட அங்கிருக்கும் பணியாளர்களை அனைவரையும் அறிமுகபடுத்துகிறார். அப்பொழுது அமெரிக்க நிறுவனங்களை போலல்லாது இந்தியாவிலிருக்கும் பணி நிறுவனங்கள் எளிமையாகவும் வசதிகள் குறைவாகவும் இருப்பதை காண்கிறார். மேலும் இந்திய பணியாளர்கள் தங்களது ஆங்கிலம் பேசும் திறனையும் சோதித்து பார்க்கும் டோட் அவர்களுக்கு மேலும் பயிற்சி தேவை என்பதை அறிகிறார். இந்தியர்கள் சிறப்பாக ஆங்கிலம் பேசுபவர்களாயினும் அவர்களுக்கு அமெரிக்க உள்ளூர் நடைமுறை பேச்சு பயிற்சியினை அளிக்க விளைகிறார். மேலும் இந்தியாவின் வசதி குறைவான இடங்களிலும் பணிசெய்ய கற்றுகொண்டவர்களை பற்றியும் இந்திய கலாசாரம் பற்றியும் மட்டுமல்லாது தன்னை பற்றியும் அவர் அறிந்து கொள்ள இந்த வாய்ப்பு அவருக்கு பின்வரும் காட்சிகளில் விளக்க படுகிறது. ஒருநாள் அவரது பழைய காதலிக்கு தொலைபேசியில் அழைக்கும் டோட் அவரது காதலியுடன் வேறு யாரோ அந்த சமயத்தில் உடனிருப்பதறிந்து பெரும் மன வருத்தம் கொள்கிறார்.

இவ்வேளையில் டோட்'இன் நிறுவனத்திலிருந்து பணியில் சில மாற்றங்கள் புதிதாக விதிக்க படுகின்றன. நிறுவனத்தில் பெறப்படும் ஒரு தொலைபேசி அழைப்பின் மொத்த நேரம் 12 நிமிடங்களில் இருந்து 6 நிமிடங்களாக குறைக்கப்படுகிறது. இவரது அணியில் உள்ள பணியாளர்கள் இந்த இலக்கை அடையாத பட்சத்தில் டோட்'இன் தலைமை அதிகாரி அவரை வீட்டிற்கு திரும்ப செல்ல விடாத வகையில் இலக்கு விதிகின்றார். மற்றொரு தொலைபேசி அழைப்பாக நிர்வாகி இது நம்பிக்கையான இலக்கல்ல என்றுரைக்கிறார். பணியாளர்களுடன் கடிந்து வேலை வாங்குவதை விட அங்கிருக்கும் நிலைமையை ஏற்றுக்கொண்டு அவர்களை தட்டி கொடுத்து வேலை வாங்க பழகி கொள்கிறார் டோட்.

இந்த தருணத்தின் இடையில் ஒருநாள் ஹோலி பண்டிகை என்னும் வண்ண கொண்டாட்டங்களின் இடையே சிக்கி கொள்கிறார் டோட். ஆரம்பத்தில் இவர் தான் மீது வண்ண கலவைகள பூச வரும் மக்கள் கூட்டத்தில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்த பொழுதிலும் பின்னர் அவரும் அந்த கொண்டாட்டத்தின் உற்சாகத்தில் கலந்து விடுகிறார். கொண்டாட்ட முடிவில் அந்த கிராமத்தில் இருக்கும் ஒரு குளத்தில் குளித்து சுத்தம் செய்து கொண்டு வெளிவருகையில் இந்திய கலாச்சாரத்தினை ஏற்று கொண்ட ஒரு மனிதராக உணர்கிறார். ஒருநாள் இரவு டோட் தனது அழைப்பாக பணியாளர்களை அவர்களில் ஊக்கமான வேலைக்காக பாராட்டுகிறார். அப்பொழுது அவர் தன் கீழ் பணியாற்றும் பணியாளர்களிடம் அவர்கள் இன்னும் ஆர்வமாகவும் சிறப்பாகவும் பணியாற்ற என்னென்ன வசதிகள் வேண்டுமென்று கேட்கிறார். அதற்கு பணியாளர்களில் ஒருவர் தனது குடும்பத்தின் நிழற்படம் ஒன்றை தனது மேசையின் மீது வைத்துகொள்ள வினவுகிறார். மற்றொருவர் தனது விருப்பபடி ஆடையணிய வினவுகிறார். மற்றொருவர் தாங்க விற்கும் பொருட்களில் ஒரு சிலவற்றை தங்களுடன் எடுத்து செல்ல வேண்டி கேட்கிறார். இந்த அனைத்து வித விண்ணப்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் டோட் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்ய நினைக்கிறார். மேலும் சில நூறு புதிய பொருட்களை அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு அறிமுகபடுத்த எண்ணி மேலதிகாரிகளின் கவனத்திற்கு அந்த பொருட்களை கொண்டு செல்லும் டோட்'இன் விண்ணப்பங்கள் மேலதிகாரிகளால் நிராகரிக்க படுகிறன. அதற்கு டோட் இதே பொருட்கள் இந்தியாவின் சந்தையில் அமோக லாபங்களை அள்ளி தரும் பட்சத்தில் அமெரிக்க சந்தையிலும் லாபம் ஈட்டும் என்று விளக்குகிறார்.

பின்னர் இவரது மேலதிகாரிகள் ஒரே இரவில் அவர் கேட்ட விதத்தில் சிறந்த பொருட்களை விற்பனை மைய்யத்திற்கு அனுப்பி வைத்து அங்கீகரிக்கிறனர். ஆனால் விற்பனை பொருட்கள் அனைத்தும் எதிபாராத விதமாக ஒரே பெயருடைய நகரங்களில் காரணத்தினால் தவறான இடத்திற்கு சென்றடைகின்றன. பின்னர் டோட்'உம் ஆஷா'வும் அந்த பொருட்களை மீட்கும் பொருட்டு பயணிகிறனர். அப்பொழு வாடகை மகிழ்வுந்தின் ஓட்டுனரின் முன்பக்க மேடையின் மீது இருக்கும் காளி தேவியின் சிலையினை பார்த்து வியந்து அதை பற்றி ஆஷாவிடம் கேட்கிறார். அதற்கு ஆஷா காளி தேவி என்பவள் தீமைகளை அழிக்கும் பொருட்டு நிகழ்ந்த அவதாரம் என்று விளக்குகிறார். இதை கேட்கும் டோட் அப்படியானால் காளி தேவி தற்பொழுது தான் அந்த அவதாரத்தை நம்பும் பொருட்டு எவற்றையாவது அழிப்பாரா என்று கிண்டல் செய்கிறார். பின்னர் அவர்கள் ஒரு பயண படகில் பயணிக்கின்ற பொழுது எதிபாராத விதமாக பயண படகின் பயணம் தடைபடுகிறது. நீங்கள் கேலி செய்ததால் தான் இவ்வாறு நிகழ்ந்ததென்று ஆஷாவும் பதிலுக்கு டோட்'இடம் விளக்குகிறார். பின்னர் அவர்கள் சென்றைய நேரம் பிடித்த காரணத்தினால் அங்கிருக்கும் தாங்கும் அறை ஒன்றினை டோட்'உம் ஆஷா'வும் பகிர்ந்து கொள்கிறனர். அது காதலர்களுகென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அறை என்பதை உள்ளே பிரவேசித்ததும் புரிந்து கொள்கிறார்கள். ஆரம்பத்தில் ஆஷாவும் டோட்'உம் தயங்கினாலும் பின்னர் இணைகிறார்கள். பின்னர் ஆஷா தனது கணவனல்லாத ஒருவருடன் தனியறையில் தங்கியதை மற்றவர்கள் அறிந்தால் என்னவாகும் என்று எண்ணி பயபடுகிறார். இந்த பயம் டோட்'ற்கு புதிதாக தெரிகிறது. பின்னர் ஆஷா இது போன்ற செயல்கள் அமெரிக்க கலாச்சாரத்தில் வேண்டுமானால் சகஜமாக இருக்கலாம் ஆனால் இந்தியாவில் இது கலாச்சார பார்வையில் பெருங்குற்றம் என்று விளக்குகிறார்.

பின்னர் அவர்கள் சென்ற வேலையை முடித்துக்கொண்டு அலுவலகம் திரும்பிய பின்பு டோட்'இடம் தான் தனது நான்கு வயதின் பொழுதே ஏற்கனவே திருமணத்திற்கு மற்றொருவருடன் நிச்சயிக்க பட்டவள் என்கிற உண்மையை விளக்குகிறார். இதைகேட்டு டோட் வருந்துகிறார். இந்த உறவுக்கு ஆஷா கோவாவின் விடுமுறைநாட்கள் என்று பெயரிட்டு அழைக்கிறார். பின்னர் தன்னுடன் ஒரு சக பணியாளரிடம் பழகுவது போன்று பழகும்படிக்கு டோட்'ஐ கேட்டுகொள்கிறார். இது போன்ற விந்தையான சமூக அமைப்பினை இதற்கு முன்பு கண்டிராத டோட் வியக்கிறார். முன்பின் தெரியாத ஒருவரை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று ஆஷாவிடம் கேட்கிறார். அதற்கு தனது தாய் தனது தந்தையை காதலித்தது போல தான் தனது எதிர்கால கணவரை தான் காதலிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

இதைகண்டு வியந்தவராக எப்படி ஒருவரை காதலிக்க கற்று கொள்ள முடியும் என்று உறுதியாக மறுத்து பேசுகிறார். காதல் என்பது இயற்கையானதல்லவா அது பெரியவர்களால் நிச்சயிக்கப்படும் ஒரு திருமணத்தில் எவ்வாறு நிகழ முடியும் என்று கேட்கிறார். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் மட்டுமே காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழ்வில் வெற்றி பெற முடியும் என்று கேட்கிறார். இது விநோதமானது என்றும் கூறுகிறார். அதற்கு ஆஷா டோட்'இடம் முழுக்க முழுக்க காதலித்து திருமணம் செய்து கொள்ளும் அமெரிக்காவில் தான் விவாகரத்து சதவிகிதம் 50% என்று பதிலுக்கு விளக்குகிறார். பின்னர் தான் தனது சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு முன்னேறியவள் என்று கூறுகிறார். தனது பள்ளி படிப்பு முதல், கல்லூரி மற்றும் வேலை முதல்கொண்டு அனைத்திற்கும் அனேக கஷ்டங்களுக்கு பின்னரே எவற்றையும் பெற்றதாக கூறுகிறார். ஆரம்பத்தில் இருந்தே தனது பெற்றோர்கள் தான் கல்லூரி செல்வதற்கும் வேலைக்கு செல்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்த பொழுதிலும் ஜெயித்து காட்டியதாக கூறுகிறார். பின்னர் டோட் ஒருகட்டத்தில் புரோ'விடம் ஆஷாவைபற்றி கூறுகையில் கடைசியாக ஆஷாவால் எதுவும் செய்ய முடியும் என்றுரைக்கிறார். மேலும் இந்த தகுதிக்காக தான் ஆஷாவை உதவி நிர்வாகியாக பணியேற்றம் செய்து வைக்க விரும்புவதாக கூறுகிறார்.

இந்த தருணத்தில் டோட்'இன் தலைமையாளர் டேவிட் இந்தியாவில் நடக்கும் பணியினை ஆய்வு செய்யும் பொருட்டு திடீரென்று இந்தியாவிற்கு வருகை தருகிறார். அவர் வரும் தருணத்தில் வெள்ளமொன்றின் காரணமாக தொலைபேசி அழைப்பகம் தண்ணீரில் மிதப்பதை காண்கிறார். இப்படி ஒரு இடத்தில் எவ்வாறு வேலை செய்ய முடியும் என்று கோபம் கொள்கிறார். உடனே டோட் தனது பணியாளர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்று தற்காலிகமாக வேலையிடத்தை நிறுவுகிறார். இதைக்கண்ட டேவிட் மொட்டை மாடியில் நிறுவனமா? அது எவ்வாறு சாத்தியம் கண்டிப்பாக நடககூடியதல்ல என்று கூறுகிறார். அதற்கு டோட் இது அமெரிக்காவில் வேண்டுமானால் சத்தியமிலாத ஒரு நிகழ்வாக இருக்கலாம். ஆனால் இங்கு எதுவும் சாத்தியமே என்று விளக்குகிறார். மேலும் அன்றைய வேலையினை வெற்றிகரமாக செய்து முடித்து காட்டுகிறார்.

வார இறுதியின் கொண்டாட தனது பணியாளர்களுடன் மகிழ்வகம் செல்லும் முன் டோட்'இடம் டேவிட் இந்தியாவில் இருக்கும் அழைப்பாக கிளையை இங்கிருப்பதை விட சீனா'வில் நடத்தினால் இன்னும் செலவு குறைவாகவும் அதிக லாபமாகவும் நடத்தலாம் என்பதால் இந்த கிளையை மூடவிருப்பதாக கூறுகிறார். டோட்'ஐ தவிர அனைத்து பணியாளர்களையும் பணிநீக்கம் செய்து விட்டு டோட்'ஐ சீனாவிற்கு அங்கு பணியமர்த்த போகும் புது பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் நிமித்தமாக அனுப்ப திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகிறார். இதை தனது பணியாளர்களின் மக்தியில் கவலையுடன் டோட் பகிர்ந்துகொண்டாலும் அவரது பணியாலகளில் பலர் இதை பெரிய விஷயமாக எடுத்துகொள்ளாமல் தங்களது அடுத்த வேலையை பற்றி சிந்திக்க தொடங்குகிறனர். ஆனால் அந்த கிளையினை நடத்திய புரோ'விற்கோ இது ஏமாற்றமாகிறது. இதன் காரணமாக தான் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாதென்று வருந்துகிறார். மேலும் தான் மற்றொரு வேலையை தேடும் அளவிற்கு இளமையுடன் இல்லையென்றும் கவலைகொள்கிறார்.

பின்னர் டேவிட் இடம் தான் சீனாவிற்கு செல்ல விருப்பமில்லை என்றும் வேலையை ராஜினாமா செய்வதென்றும் கூறுகிறார். இதற்கு மாற்றாக புரோ'வை அவ்விடத்தில் பணியமர்த்தும் படி பரிந்துரைக்கிறார். அதையே டேவிட்'ம் செய்கிறார். பின்னர் மனநிறைவானவராக டோட் சியாட்டில் நகருக்கே திரும்புகிறார். பின்னர் படம் முடியும் தருவாயில் டோட்'இன் அலைபேசி ஆஷாவிற்கான பிரத்யேக அழைப்பு ஓசையுடன் ஒலிக்கிறது டோட் சிரித்துக்கொண்டே அந்த அலைபேசியினை எடுப்பதுடன் படம் நிறைவடைகிறது.

தயாரிப்பு தொகு

படத்தின் ஒளிப்பதிவு மும்பையில் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் மார்ச் 13 வரை நடத்தப்பட்டது தொடர்ந்து சியாட்டில் நகரில் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரைக்கும் நடத்தி படம் எடுத்து முடிக்க பட்டது. இந்த திரைப்படமானது. ஜார்ஜ் விங் மற்றும் ஜான் ஜெஃப்கோட் அவர்களது திரைக்கதையை மையமாக கொண்டது.