அவோகேட்ரைட்டு
அவோகேட்ரைட்டு (Avogadrite) என்பது (K,Cs)BF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். பொட்டாசியம்-சீசியம் டெட்ராபுளோரோபோரேட்டு என்ற சேர்மமாக ஓர் ஆலைடாக இது வகைப்படுத்தப்படுகிறது. செஞ்சாய்சதுர வடிவத்தில் Pnma என்ற இடக்குழுவில் 8.66 Å, b 5.48 Å மற்றும் c Å 7.03 அளவுருக்களில் அவோகேட்ரைட்டு படிகமாகிறது.
அவோகேட்ரைட்டு Avogadrite | |
---|---|
அவோகேட்ரைட்டு (பழுப்பு மஞ்சள்) மீது பெரூசைட்டு (வெண்மை), படம்: 5 மி.மீ | |
பொதுவானாவை | |
வகை | ஆலைடு கனிமம் |
வேதி வாய்பாடு | (K,Cs)BF4 |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றும் வெண்மையாகவும், செம்மஞ்சள் |
படிக இயல்பு | சீரற்ற எண்முக படிகங்கள் |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
மிளிர்வு | பளபளப்பானது, எண்ணெய்ப்பசை கொண்டது |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் |
ஒப்படர்த்தி | 2.9 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 1.3239, nβ = 1.3245, nγ = 1.3247 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.001 |
2V கோணம் | 75°(அளக்கப்பட்டது), 58° (கணக்கிடப்பட்டது) |
மேற்கோள்கள் | [1][2][3] |
வரலாறு
தொகுஇத்தாலியக் கனிமவியலாளர் பெரூக்சியோ சாம்போனினி 1926 ஆம் ஆண்டில் அவோகேட்ரைட்டு கனிமத்தைக் கண்டறிந்தார். இதற்காக அவர் வெசுவியசு மலைக்கு அருகில இருந்த பல நீரவித்துளைகளிலும், இலிபாரி தீவிலும் கிடைத்த பல மாதிரிகளை ஆய்வுசெய்தார். இயற்கையில் எரிமலை நீராவித்துளைகளைச் சுற்றி ஒரு பதங்கமாகும் பொருளாக அவோகேட்ரைட்டு காணப்படுகிறது [1]. 1776-1856 காலத்தில் வாழ்ந்த இத்தாலிய விஞ்ஞானி அமெடியோ அவோகேட்ரோவின் பெயரை இக்கனிமத்திற்கு இவர் சூட்டினார் [4].
பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் அவோகேட்ரைட்டு கனிமத்தை Avg[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Handbook of Mineralogy: Avogadrite" (PDF). The Mineralogical Society of America. Archived from the original (PDF) on 2012-02-18. பார்க்கப்பட்ட நாள் 2010-01-09.
- ↑ Avogadrite on Mindat.org
- ↑ Avogadrite data on Webmin
- ↑ Zambonini, Ferruccio (1926). Sulla presenza, tra i prodotti dell'attuale attività del Vesuvio, di una varietà cesifera del fluoborato di potassio, (On the presence, among the products of Vesuvius, of a caesium-bearing variety of potassium fluoborate), Rend. Accad. Lincei. 6. பக். 644–649.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.