அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி

புதுச்சேரி அரசாங்கத்தால் மகளிரின் உயர் கல்விக்காகத் துவக்கப்பட்டது, காரைக்காலில் உள்ள அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி (Avvaiyar Govt College for Women) ஆகும்.

இந்த கல்லூரி 1972ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக இணைப்புடன் தொடங்கப்பட்டது. பின்னர் புதுவைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. முதலில் கலை மற்றும் அறிவியல் துறைகள் மட்டுமே தொடங்கப்பட்டது. பெண்கள், மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வரலாறு, ஆங்கில இலக்கியம், தாவரவியல், கணிதம், வேதியியல், இயற்பியல் மற்றும் மனையியல் துறைகள் பின்னர் தொடங்கப்பட்டன. [1]

கல்லூரியில் துறைகள் தொகு

1972ஆம் ஆண்டில் கல்லூரி தொடங்கப்பட்டபோது கலை மற்றும் அறிவியல் துறை என்ற ஒரே ஒரு துறை மட்டுமே இருந்தது.

  • பி.ஏ. வரலாறு-1973–74 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது.
  • பி.ஏ. ஆங்கில இலக்கியம்-1976-77 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது
  • பி.எஸ்.சி தாவரவியல்-1977-78 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது
  • பி.எஸ்சி கணிதம்-1978–79 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது
  • பி.எஸ்.சி வேதியியல்-1980–81 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது
  • பி.காம் அல்லது வணிகத் துறை -1984-85 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது
  • பி.எஸ்.சி இயற்பியல் 1985-86 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது
  • பி.எஸ்.சி ஹோம் சயின்ஸ் 1995-96 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது.
  • பி.எஸ்சி கணினி அறிவியல் 1998-99 கல்வியாண்டில் தொடங்கப்பட்டது.
  • கார்ப்பரேட் செயலகத்தில் பி.காம்- 2010–11 கல்வியாண்டில் வேலை சார்ந்த படிப்புகளின் கோரிக்கைகளிலிருந்து தொடங்கப்பட்டது.

முதுகலை படிப்புகள் தொகு

புதுச்சேரி அரசு எம்.ஏ ஆங்கிலம் மற்றும் எம்.எஸ்சி முதுகலை படிப்புகளைத் தொடங்கியது. 1997-98 கல்வியாண்டில் தாவரவியலும், 2000-01ஆம் ஆண்டில் பெண்கள் மாணவர்களின் நலனுக்காக எம்.ஏ வரலாறும் தொடங்கப்பட்டன.

அமைவிடம் தொகு

அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி காரைக்காலில் உள்ள அண்ணல் அம்பேத்கர் தெருவில் அமைந்துள்ளது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Avvaiyar Government College for Women, Karaikal". agcw.edu.in. Archived from the original on 27 February 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-02-26.
  2. "Avvaiyar Government College for Women – pondicherrycolleges.com". pondicherrycolleges.com. Archived from the original on 2017-02-27. பார்க்கப்பட்ட நாள் 2017-02-26.