அஸ்வபதி (Ashwapati or Aśwapati) (अश्वपति) பண்டைய பரத கண்டத்திற்கு வடமேற்கு நாடுகளில் ஒன்றான கேகய நாட்டின் மன்னர் ஆவார். அஸ்வபதியின் மகளான கைகேயி, கோசல நாட்டு மன்னரான தசரதன் மூன்றாவது மனைவியாவள். கேகய நாட்டில் வலிமை மிகுந்த போர்க் குதிரைகள் அதிகம் வளர்ந்ததால், அந்நாட்டு மன்னருக்கு அஸ்வபதி (குதிரைகளின் தலைவன்) எனப் பெயராயிற்று.

அஸ்வபதி, பரதனின் தாய்வழி பாட்டன் ஆவார். சத்தியவான் சாவித்திரி கதையில், சாவித்திரியின் தந்தையான அஸ்வபதி மத்திர நாட்டின் மன்னராக விளங்குகிறார். [1]

மனைவியை நாடு கடத்துதல் தொகு

பறவைகளின் பேச்சு மொழி அறிந்த மன்னர் அஸ்வபதி, பறவைகள் பேசியதை வேறு நபர்களுக்கு கூறினால் இறந்து விடுவார் என்ற சாபமும் பெற்றவர். ஒரு முறை மன்னர் அஸ்வபதி, தனது பட்டத்து இராணியுடன் அரண்மனை தோட்டத்தில் உலா வரும் போது, அன்னப்பறவைகள் பேசுவதை கேட்டுச் வாய் விட்டுச் சிரித்தார். மன்னரின் சிரிப்புக்கான காரணம் கேட்ட இராணிக்கு, அதை தான் வெளியே கூறினால் தான் இறந்து போகும் சாபம் உள்ளதாகக் கூறியும், இராணி சிரிப்பிற்கான காரணத்தை கட்டாயம் கூறித்தான் ஆக வேண்டும் என்றதால், மன்னர் அஸ்வபதி, தன் உயிரை விட, தனது சிரிப்பிற்கான காரணம் அறிவதிலே ஆர்வம் கொண்ட இராணியை அவளது தாய் நாட்டிற்கு கடத்தினான். [2]

மேற்கோள்கள் தொகு

  1. https://plus.google.com/+AnanthaNarayanan/posts/dcqUj7Et5Mp
  2. Everything About the Mother of Kaikeyi!


"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்வபதி&oldid=2577441" இலிருந்து மீள்விக்கப்பட்டது