அஸ்வான்
அஸ்வான் (Aswan) என்பது தெற்கு எகிப்தில் உள்ள ஒரு நகரமாகும். இது அஸ்வான் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். பரப்பரப்பான வணிக மையமாகவும், சுற்றுலா மையமாகவும் உள்ள இந்த நகரானது அஸ்வான் அணையின் வடக்கில், கைரோவிற்கு 590 மைல் தெற்கே நைல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்நகரானது கைரோவிலிருந்து தொடர்ருந்தால் இணைக்கப்பட்டுள்ளது.
Aswan
أسوان Ⲥⲟⲩⲁⲛ | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 24°05′20″N 32°53′59″E / 24.08889°N 32.89972°E | |
நாடு | எகிப்து |
Governorate | அஸ்வான் |
ஏற்றம் | 194 m (636 ft) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 2,90,327 |
நேர வலயம் | ஒசநே+2 (EET) |
இடக் குறியீடு | (+20) 97 |
இந்நகர்ப் புறத்தே பழங்கால எகிப்திய நாகரிகத்தின் சின்னங்கள் பல காணக்கிடைக்கின்றன. இங்குப் பல பழைய கோயில்களின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து இந்நகர் கடந்த 40 நூற்றுண்டுகளாகவேனும் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. 16ஆம் நூற்றுண்டில் சலீம் என்னும் துருக்கி சுல்தான் இதைக் கைப்பற்றி இங்கு ஒரு படையணியை நிறுத்தினான். அக்காலத்தில் இங்கு வந்து குடியேறினவர்களுடைய வழித்தோன்றல்களே இப்போது இங்கு மிகுதியாகப் காணப்படுகின்றனர். 19ஆம் நூற்றுண்டின் இறுதியில் ஆங்கிலேயர்கள் எகிப்தியப் படையின் உதவியைக் கொண்டு இந்நகரை ஆக்கிரமித்துக் கொண்டனர். எகிப்திற்கும் சூடானிற்கும் அபிசீனியாவிற்கும் இடையே இது ஒரு முக்கியமான சரக்கு இறக்கேற்றுத்தலமாக விளங்குகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "அசுவான்". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 35. அணுகப்பட்டது 16 மார்ச் 2019.