அஹதிய்யா பாடசாலை

அஹதிய்யா பாடசாலை என்பது இலங்கையில் வாழும் முஸ்லிம்க்ளுக்கு இஸ்லாமியக் கல்வியை கற்றுக் கொடுக்கும் பாடசாலைகளின் வலையமைப்பாகும். இப்பாடசாலைகள் வாரத்தில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் நடைபெறுகிறது. இவ் வலையமைப்பு 'மத்திய அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனம்'(Central Ahadiyyah Schools Federation) எனப்படும் தாய் நிறுவனத்தினால் இயக்கப்படுகிறது. பல துறைகளையும் சார்ந்த இஸ்லாமிய மற்றும் சமூகப்பற்றுமிக்க ஆண், பெண் இரு பாலாரையும் கொண்ட தொண்டர் ஆசிரியர்களால் இப்பாடசாலை மாணவர்களுக்கு மார்க்கக் கல்வி ஊட்டப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஹதிய்யா_பாடசாலை&oldid=3596819" இலிருந்து மீள்விக்கப்பட்டது