அ. ஜோன் ஜிப்பிரிக்கோ

அருள்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ  

இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு  கட்சியின்  உறுப்பினரும் ஆவார். இவர் தனது 20ஆவது வயதில் 2011ஆம் ஆண்டு தனது பல்கலைக்கழக  படிப்பின் போதே உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டு மிக இளவயதிலேயே இலங்கை உள்ளூராட்சி கட்டமைப்பில் கீழ் நிலை உள்ளூராட்சி மன்றமாக காணப்படும் பிரதேச சபை உறுப்பினராக பதவியில் இருந்தவர் ஆவார் . இவர் 2011-2015,2018-2023 என தொடர்ச்சியாக இருதடவைகள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேசசபை உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக  கடமையாற்றினார்.

1990 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 26ஆம் திகதி யாழ்ப்பாணம்  பண்டத்தரிப்பில் பிறந்த இவர் தனது சிறுவதிலேயே அக்காலத்தில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட மாபெரும் வலிகாம இடப்பெயர்வினால் யாழ்ப்பாணத்தை விட்டு இவரது குடும்பம் அகதிகளாக இடம்பெயர்ந்ததினால் தனது ஆரம்ப கல்வியை வவுனியா பிறமண்டு அதக பாடசாலை,வவுனியா சைவபிரகாசா மகளீர் மகாவித்தியாலயம் ,வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கற்றார் பின் இடைநிலை கல்வியை யுத்த நிறுத்த சமாதான உடன்படிக்கை காலத்தில் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய பின் சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரியில் கற்றதுடன் உயர்கல்வியை மட்டக்களப்பிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கையில் கற்று நுண்கலை பட்டதாரியாக பெற்று கொண்டார்.

சிறுவயது முதலே அரசியல் ஆர்வம் உள்ள இவர் 2009இல் தமது பாடசாலை கல்வி நிறைவடைந்த பின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தன்னை இணைத்து கொண்டு அரசியலில் ஈடுபட தொடங்கியதுடன் 2009இல் இலங்கையில் இறுதி யுத்தம் நிறைவடைந்த பின் முதன் முறையாக வடபகுதியில் அடக்குமுறைகளுக்கு மத்தியில் நடைபெற்ற 2011உள்ளூராட்சி சபை தேர்தலில் வலி தென்மேற்கு மானிப்பாய் பிரதேசசபைக்காக தனது 20ஆவது வயதில் போட்டியிட்டு முதன்முறையாக பிரதேச சபைஉறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.  பின்னர் 2018இல் உள்ளூராட்சி தேர்தல் சட்ட திருத்தங்களின் பின் நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் பண்டத்தரிப்பு வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினராக வெற்றி பெற்று  கடமையாற்றியுள்ளார்.

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._ஜோன்_ஜிப்பிரிக்கோ&oldid=4026821" இலிருந்து மீள்விக்கப்பட்டது