ஆகவ ராம பாண்டியக் கோன்

ஆகவ ராம பாண்டியக் கோன் என்பது சூரிய காங்கேயன் என்பவனுக்கு வழங்கப்பட்ட விருது.

சூரியன் என்பான் காங்கேயம் ஊரில் வாழ்ந்து வந்தான். இவன் மோறூர் நாட்டை ஆண்டவன். இவனைச் சூரிய காங்கேயன் என்றனர். இவன் பாண்டியனின் படைத்தலைவன் மற்றும் குறுநில மன்னன். இவனது அரசன் ஆகவ ராம பாண்டியன். ஆறகழூர் வாணன் பாண்டியனுக்கு எதிராகப் புரட்சி செய்தான். இவனைச் சூரிய காங்கேயன் அடக்கினான். இதனைப் பாராட்டிப் பாராட்டிப் பாண்டியன் இவனுக்கு ஆகவ ராம பாண்டியக் கோன் என்னும் விருதினை வழங்கினான். அத்துடன் தனக்கே உரிமை உள்ள வேப்பம்பூ மாலையை அணிந்துகொள்ளவும், மீன் கொடி பிடித்துக்கொள்ளவும் உரிமை வழங்கினான். [1] [2]

மேற்கோள்கள்

தொகு
  1. கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம், சாரதா பதிப்பகம், 2008, முனைவர் ந. ஆனந்தி தெளிவுரை பாடல் 88 விளக்கம், பக்கம் 138 முதல்
  2.  ஏய்ப்பொடு மீறும் ஒருவாணன் கொட்டம் எலாம் அடக்கக்
    கோப்பெருமான் ஆகவராம பாண்டியக் கோன் எனவே
    வேப்பமலர் மாலையும் மீனப் பாதாகை விருது மற்றும்
    வாய்ப்புடன் ஈயப்பெறு சூரியன் கொங்கு மண்டலமே. 88

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகவ_ராம_பாண்டியக்_கோன்&oldid=2998886" இலிருந்து மீள்விக்கப்பட்டது