அகஸ்டின் கப்பெல்லி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அகஸ்டின் கப்பெல்லி (Augustinus Capelli) இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு கிறித்தவ போதகர் ஆவார், வேதத்தை போதித்ததால் இவரை மக்கள் வேதபோதகர் என்றே அழைக்கின்றனர். இயேசு சபையைச் சேர்ந்த துறவியான இவர் மதுரை மறைத்தளத்திலிருந்து 1710-1715 கிறித்தவப் பிரச்சாரம் மேற்கொண்டார். 1711 ம் ஆண்டு வேதபோதகர் பணியின் தொடக்கமாக தமிழைக் கற்றார்.
மேலும் மதுரை மறைத்தளத்திற்கு உட்பட்ட பகுதிகளை தம் சகபணியாளர்களோடு சந்தித்தார். அவர் ஆற்றிய பணிகளை பற்றியும் , வேதகலாபனைகள், பணியாளர்கள் தங்கியிருந்த இல்லங்களின் தகர்ப்புகள், கொடுத்த திருமுழுக்கின் எண்ணிகைகள், மக்களின் விசுவாச வாழ்வு, இவற்றை பற்றி கி.பி 1711 -ம் ஆண்டு தனது வருடாந்திர கடிததில் குறிப்பிட்டுள்ளார். கி.பி 1711 ம் ஆண்டு தன்னுடைய சுற்றுப்பயணத்தின் போது கழுகேர்கடை வந்த வேத போதகர் ஓர் அற்புதத்தை கண்டார்; சிக்கலான பிரசவ வலியால் ஒரு பெண் இருந்தார். புதிதாக கிறித்தவராக மாறியிருந்த ஒருவர் அப்பெண்ணிடம் தூய சவேரியாரிடம் மன்றாடுமாறு கேட்டுக் கொண்டார். அவ்வாறு கேட்டு கொண்ட உடனேயே சுகப்பிரசவம் அப்பெண்ணுக்கு கிடைத்தது. உடனே அக்குடும்பத்தினர் கிறித்தவத்தைத் தழுவி திருமுழுக்கு பெற்றனர் புனித சவேரியாரிடம் பக்தி கொண்டிருந்த மக்களைக் கண்டதால் கழுகேர்கடையில் தூய சவேரியாரின் பெயரில் வேத போதகர் ஆலயம் கட்டினார் இச் செய்தியை அவரே கி.பி 1712 ம் ஆண்டு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.