ஆகாயகர்பர்

(ஆகாஷகர்பர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆகாயகர்ப போதிசத்துவர் (சீனம்: 虛空藏菩薩 Xūkōngzàng púsà; சமஸ்கிருதம்: आकाशगर्भ ஆகாஷகர்ப) அட்டமா போதிசத்துவர்களுள்(அஷ்ட மஹா போதிசத்துவர்கள்) ஒருவர் ஆவார். இவரது பெயருக்கு ஆகாயத்தை போன்ற அளவில்லாத அறிவாற்றலை உடையவர் என்று பொருள். இவருக்கு நெருங்கிய தொடர்புடைய இன்னொரு போதிசத்துவர் ஷிதிகர்பர் ஆவார். ஆகாயகர்பரை ஜப்பானில் கொகுஃஸோ(Kokūzō) என அழைக்கின்றனர்.

ஆகாயகர்பர்

ஷிங்கோன் பௌத்தத்தை தோற்றுவித்தவரான கூக்காய், இவரது மந்திரத்தை புத்த துறவியாக இருக்கும் போது உச்சரித்ததால் ஆகாயகர்பருடை தரிசனம் கிடைத்ததாக கூறுவர். கூக்காய் மந்திரத்தை உச்சரிக்கையில் ஆகாயகர்பர் தரிசனம் தந்து, ஞானத்தை மஹாவைரோசன சூத்திரத்தில் தேடுவதற்கு பணித்தார்.

ஆகாயகர்பர்

மந்திரம்

தொகு

இவருடைய கீழ்க்கண்ட மந்திரம் பொதுவாக ஷிங்கோன் பௌத்த பிரிவினராலும், பௌத்த கலைஞர்களாலும் பயன்படுத்தபடுகிறது. இந்த மந்திர உச்சாடனம் செய்தால் ஞானம் பெருகும் என்றும், அறிவின்மை அகலும் எனவும் நம்பப்படுகிறது.

  • சீனம்: Na Mo Xu Kong Zang Pu Sa
  • வியட்னாமியம்: Nam Mo Hu Khong Tang Bo Tat
  • சமஸ்கிருதம்: नमो आकाशकर्भ बोधिसत्त्व: நமோ ஆகாஷ போதிசத்தவ
  • பொருள்: ஆகாயகர்ப போதிசத்துவர் போற்றி

இவர் தொடர்புடை இன்னொரு மந்திரமும் உள்ளது

  • ஜப்பானியம்: nōbō akyasha kyarabaya on arikya mari bori sowaka.
  • சமஸ்கிருதம்: नमो अकाशगर्भाय ॐ आर्य कमरि मौलि स्वाहा நமோ ஆகாஷகர்பாய ஓம் ஆர்ய கமரி மௌளி ஸ்வாஹா
  • பொருள்: கரத்தில் மலரேந்தியவரும், பூமாலை சூடியவரும் மணிமகுடத்தை தாங்கியவருமான ஆகாயகர்பர் போற்றி

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகாயகர்பர்&oldid=3232620" இலிருந்து மீள்விக்கப்பட்டது