ஆகென் கிலிநெர்டு
ஆகென் கிலிநெர்டு (Hagen Kleinert, பிறப்பு: சூன் 15, 1941) செருமனிய இயற்பியலாளர். இவர் 1968-இல் இருந்து பெர்லின், சுயாதீனப் பல்கலைக்கழகத்தில், ஐன்ஸ்டீன் இயற்பியல் ஆய்வு மையத்தில் கொள்கைநிலை இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு திமிசோரவின் மேற்கு பல்கலைகழகமும், கிர்கிசு - உருசிய சிலாவிக் பல்கலைகழகமும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
இவரது துகள் மற்றும் திட நிலை இயற்பியல் பங்களிப்புகளுக்காக 2008 இல் பதக்கத்துடன் கூடிய மேக்ஸ் போர்ன் பரிசு வழங்கப்பட்டது. லேவ் லண்டாவுவின் 100வது பிறந்த நாளில், 2008ன் மஜோறன பரிசை வென்றார்[1].
இவர் 370 க்கும் மேற்பட்ட ஆய்வு ஏடுகளில் பங்களித்துள்ளார். இவரது பங்களிப்பு கணித இயற்பியல், அடிப்படைத் துகள் இயற்பியல், அணுக்கரு இயற்பியல், திண்மை நிலை, திரவ படிகங்கள், உயிர் சவ்வுகள், பாலிமர்கள் மற்றும் நிதி சந்தைகள்]] ஆகும். இவர் கொள்கைநிலை இயற்பியலில் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.
ஹனோவர் பல்கலைக்கழகத்திலும், ஜோர்ஜியத் தொழில்நுட்ப நிறுவனத்திலும் பட்டம் பெற்று, பெருவெடிப்பு கோட்பாட்டின் தந்தையான ஜார்ஜ் கமோவ் இடம் பொது சார்பியல் பயின்றார்.
1972 ல் ஒரு இளம் பேராசிரியரான கிலிநெர்டு, கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தின் குறிப்பிடத்தக்க அமெரிக்க இயற்பியலாளர் ரிச்சர்ட் ஃபேய்ன்மேனால் மிகவும் ஈர்க்கப்பட்டார். ஃபேயின்மேனின் தத்துவங்களைப் பயன்படுத்தி ஐதரசன் அணுவின் ஆற்றல் மட்டங்களைக் கண்டுபிடித்தார்.[2][3].
மேற்கோள்கள்
தொகு- ↑ Kleinert H.; Ruffini, Remo; Vereshchagin, Gregory (2009). "From Landau's Order Parameter to Modern Disorder Fields". In "Lev Davidovich Landau and his Impact on Contemporary Theoretical Physics", publ. in "Horizons in World Physics") 264: 103. doi:10.1063/1.3382313. Bibcode: 2010AIPC.1205..103K. http://users.physik.fu-berlin.de/~kleinert/373/373.pdf.
- ↑ Duru I.H., Kleinert H. (1979). "Solution of the path integral for the H-atom". Physics Letters B 84 (2): 185–188. doi:10.1016/0370-2693(79)90280-6. Bibcode: 1979PhLB...84..185D. http://www.physik.fu-berlin.de/~kleinert/kleiner_re65/65.pdf.
- ↑ Duru I.H., Kleinert H. (1982). "Quantum Mechanics of H-Atom from Path Integrals". Fortschr. Phys 30 (2): 401–435. doi:10.1002/prop.19820300802. http://www.physik.fu-berlin.de/~kleinert/kleiner_re83/83.pdf.