வோல் வீதி ஆக்கிரமிப்பு

(ஆக்குப்பை வால் ஸ்ட்ரீட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வோல் வீதி ஆக்கிரமிப்பு அல்லது வால் வீதி முற்றுகை அல்லது ஒக்கியூப்பை வோல் இசுரீட் (Occupy Wall Street) என்பது ஐக்கிய அமெரிக்காவிலும், பிற பல மேற்கு நாடுகளிலும் நடைபெற்றுவரும் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும். வங்கிகளின், பெரும் வணிகங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பது, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான விரிந்துவரும் இடைவெளியை எதிர்ப்பது, அரசுக்கும் வணிகங்களுக்குமான "உட்கூட்டை" எதிர்ப்பது உட்பட பல்வேறு காரணங்களுக்காக இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகக் ஒழுங்கைமைப்பாளர்கள் கூறுகிறார்கள்.

வால் வீதி முற்றுகை
Occupy Wall Street
Part of "முற்றுகை" போராட்டங்கள்
தேதிசெப்டம்பர் 17, 2011 (2011-09-17) - நவம்பர் 15, 2011 (2011-11-15)
அமைவிடம்
அமெரிக்கா
காரணம்செல்வச்செழிப்பில் பாகுபாடு, பெருநிறுவனங்கள் அரசாண்மையில் குறுக்கீடு, சமூக சனநாயகம் போன்றவை.
முறைகள்
நிலைபிற நகரங்களிலும் "முற்றுகை" இயக்கங்கள் தொடர்கின்றன.
எண்ணிக்கை
சுக்கோட்டிப் பூங்கா

பல நூறு "தீவிர" போராட்டக்காரர்கள்[1]

நியூயார்க் நகரில் பிற செயல்பாடுகள்:

  • 2,000+ பேரணி
    (அக்டோபர் 2, 2011இல் காவல்துறை தலைமையகத்திற்கு பேரணி)

[1]

  • 700+ பேரணி
    ( அக்டோபர் 3, 2011இல் புரூக்லின் பாலத்தைக் கடத்தல்)[2]
  • 15,000+ பேரணி
    ( அக்டோபர் 5, 2011இல் கீழ் மன்ஹாட்டனில் ஒற்றுமை பேரணி)[3]
  • 6,000+ பேரணி
    (அக்டோபர் 15, 2011இல் டைம்ஸ் சதுக்க வேலைச்சேர்ப்பு மையத்தில்)[4]
உயிரிழப்புகள் மற்றும் இழப்புகள்
Arrests: 780+[2]

வரலாறு

தொகு

நியூயார்க் நகரத்தின் வோல் ஸ்ட்ரீட் நிதி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜுகோட்டி பூங்காவில் செப்டம்பர் 17 இல் சுமார் 1000 பேருடன் தொடங்கிய இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் நவம்பர் 15, 2011 வரை நீடித்தது.[5] ரொறன்ரோ, இலண்டன், பாரிசு, அத்தென்சு எனப் பல மேற்குநாட்டு நகரங்களிலும் இவ்வியக்கம் நடைபெற்றது.

இலக்குகள்

தொகு
  • அரசியலில் பெருநிறுவனங்களின் செல்வாக்கைக் குறைத்தல்,
  • வருமானத்தின் சீரான விநியோகம்,
  • மாணவர்களுக்கு படிப்பிற்கேற்ற தகுதியான வேலைகள்,
  • வங்கிக் கொள்கைகள் சீர்திருத்தம் (குறிப்பாக வங்கிகளின் ஊக வர்த்தகத்தைக் குறைத்தல்), * மாணவர்களின் கல்விக் கடன்களை தள்ளுபடி செய்தல் அல்லது கடன்பட்ட மாணவர்களுக்கு பிற நிவாரணம் அளித்தல் ஆகியவை இவ்வியக்கத்தின் முக்கிய குறிக்கோள்களில் அடங்கும். ஆனால் சில ஊடகங்கள் இந்த போராட்டங்களை "முதலாளித்துவ எதிர்ப்பு" என்று பெயரிட்டு செய்திகளை வெளியிட்டுள்ளது.மற்றவர்களோ இப்பெயரில் மட்டுமே இப்போராட்டங்கள் அடங்காது என மறுத்துள்ளனர்.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Hundreds of Occupy Wall Street protesters arrested". BBC News. October 2, 2011 இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 21, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120921170206/http://www.bbc.co.uk/news/world-us-canada-15140671. பார்த்த நாள்: October 2, 2011. 
  2. 2.0 2.1 "700 Arrested After Wall Street Protest on N.Y.'s Brooklyn Bridge". Fox News Channel. October 1, 2011 இம் மூலத்தில் இருந்து மே 25, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120525172159/http://www.foxnews.com/us/2011/10/01/500-arrested-after-wall-street-protest-on-nys-brooklyn-bridge/?test=latestnews. பார்த்த நாள்: October 1, 2011. 
  3. Gabbatt, Adam (October 6, 2011). "Occupy Wall Street: protests and reaction Thursday 6 October". Guardian (London) இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 3, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120803072134/http://www.guardian.co.uk/world/blog/2011/oct/06/occupy-wall-street-protests-live. பார்த்த நாள்: October 7, 2011. 
  4. Crain's New York Business, October 17, 2011, “Wall Street protests span continents, arrests climb“ http://www.crainsnewyork.com/article/20111017/ECONOMY/111019895
  5. "OccupyWallStreet – About". The Occupy Solidarity Network, Inc. Archived from the original on July 22, 2014. பார்க்கப்பட்ட நாள் July 20, 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வோல்_வீதி_ஆக்கிரமிப்பு&oldid=3815952" இலிருந்து மீள்விக்கப்பட்டது