ஆக்சாயீரசோல்

ஆக்சாயீரசோல் (Oxadiazole) என்பது C2H2N2O என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பல்லினவளைய அரோமாட்டிக் சேர்மமான ஆக்சாயீரசோல், நான்கு மாற்றியன்களைக் கொண்டுள்ளது.

1,2,4- ஆக்சாயீரசோல் , 1,2,5- ஆக்சாயீரசோல் , and 1,3,4- ஆக்சாயீரசோல் ஆகிய மாற்றியன்கள் அறியப்பட்டுள்ளன. ஆனால்1,2,3- ஆக்சாயீரசோல் நிலைப்புத்தன்மை இல்லாமல் ஈரசோகீட்டோன் இயங்குச்சமநிலைப் படியாக திரும்புகிறது.[1] நிலைப்புத்தன்மை கொண்ட ஆக்சாயீரசோல்கள், ரால்டெக்ராவிர், பியூட்டலமீன், பேசிப்லான், ஆக்சோலமீன் மற்றும் பிளெக்கோனரில் போன்ற பல்வேறு வகையான மருதுவகைப் பொருட்களில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Heterocyclic Chemistry, 3rd Edition, J. A. Joule, K. Mills, and G.F. Smith, page 452
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சாயீரசோல்&oldid=2045004" இலிருந்து மீள்விக்கப்பட்டது