ஆக்சோபோரேன்

வேதிச் சேர்மம்

ஆக்சோபோரேன் (Oxoborane) என்பது விளிம்பில் ஆக்சிசன் அணுவுடன் கூடிய போரான் அணுவைக் கொண்ட (a -B=O செயல்பாட்டுக் குழு) எந்த ஓர் இரசாயன சேர்மமும் ஆக்சோபோரான் எனப்படும். இச்சேர்மத்தின் வகைப்பாடு என்பது கல்வி ஆராய்ச்சியுடன் சில தொடர்புகளை கொண்டுள்ளது. தாய் சேர்மமான HBO சேர்மமும் ஆக்சோபோரேன் என்று அழைக்கப்படுகிறது. மேலும் FBO, ClBO, BrBO, HOBO MeBO ஆகியவையும் ஆக்சோபோரேன் வகைப்பாட்டில் அடங்குகின்றன. இவை அதிக வெப்பநிலையில் வாயு நிலையில் கண்டறியப்பட்டுள்ளன.[1][2] இச்சேர்மங்களில் போரானும் ஆக்சிசனும் முப்பிணைப்பால் பிணைந்து வளைய முப்படியாக்கல் மூலம் போரோக்சிம் என்ற ஆறு உறுப்பு பல்லினவளையச் சேர்மமாகின்றன.

வழிப்பெறுதிகள்

தொகு

ஒற்றைப்படிநிலை ஆக்சோபோரேன்கள் தனிமைப்படுத்தப்படவில்லை என்றாலும், வழிப்பெறுதிகள் விவரிக்கப்பட்டுள்ளன.

ஆக்சோபோரேனின் இலூயிசு அமிலம்-நிலைப்படுத்தப்பட்ட கூட்டுசேர் பொருள் (NacNacB=O.AlCl3) என்பதாகும்.[3] இந்த சேர்மத்தில் ஆக்சிசன் அணு அலுமினியம் குளோரைடுடன் ஒருங்கிணைக்கப்படுகிறது. BO பிணைப்பின் பிணைப்பு நீளம் 130 பைக்கோமீட்டர் ஆகும் (வழக்கமான போரோனிக் அமிலங்களில் இது 136 பைக்கோமீட்டராக இருக்கும்.) தொடர்புடைய இதே கட்டமைப்புகளும் அறியப்படுகின்றன..[4]

எதிர்ப்பக்க-[(Cy3P)2PtBr(BO)] சேர்மத்தில் பிளாட்டினம் BO அலகுடன் ஒருங்கிணைக்கப்படுகிறது.[5] இச்சேர்மத்தில் BO பிணைப்பு நீளம் 120 பைக்கோமீட்டர்கள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Inorganic chemistry, Egon Wiberg,Nils Wiberg,Arnold Frederick Holleman
  2. Westcott, S. A. (2010), BO Chemistry Comes Full Circle. Angewandte Chemie International Edition, 49: 9045–9046. எஆசு:10.1002/anie.201003379
  3. Synthesis and Characterization of a Coordinated Oxoborane: Lewis Acid Stabilization of a Boron−Oxygen Double Bond Dragoslav Vidovic, Jennifer A. Moore, Jamie N. Jones, and Alan H. Cowley J. Am. Chem. Soc., 2005, 127 (13), pp 4566–4567 எஆசு:10.1021/ja0507564
  4. Wang, Y., Hu, H., Zhang, J. and Cui, C. , Comparison of Anionic and Lewis Acid Stabilized N-Heterocyclic Oxoboranes: Their Facile Synthesis from a Borinic Acid. Angewandte Chemie, n/a. எஆசு:10.1002/ange.201007417 10.1002/ange.201007417
  5. Oxoboryl Complexes: Boron−Oxygen Triple Bonds Stabilized in the Coordination Sphere of Platinum Holger Braunschweig, Krzysztof Radacki and Achim Schneider Science 16 April 2010 Vol. 328 no. 5976 pp. 345-347 எஆசு:10.1126/science.1186028
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சோபோரேன்&oldid=4111204" இலிருந்து மீள்விக்கப்பட்டது