ஆக்சோ- டையீல்சு- ஆல்டர் வினை

ஆக்சோ-டையீல்சு-ஆல்டர் வினை (Oxo-Diels–Alder reaction) டையீல்சு ஆல்டர் வினையின் வேறுபாட்டு முறை வினையாகும். ஆக்சா-டையீல்சு-ஆல்டர் வினை என்ற பெயராலும் இவ்வினை அழைக்கப்படுகிறது. இவ்வினையில் பொருத்தமான டையீன் ஒன்று ஆல்டிகைடுடன் வினைபுரிந்து ஈரைதரோபிரான் வளையத்தை உருவாக்குகிறது. கரிம வேதியியலின் செயற்கை முறைகளில் இவ்வினை சிறிதளவு முக்கியத்துவம் வாய்ந்த வினையாகக் கருதப்படுகிறது.

ஆக்சோ-டையீல்சு-ஆல்டர் வினை

ஆக்சோ-டையீல்சு-ஆல்டர் வினை முதன்முதலில் 1949 [1] ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. மெத்தில்பென்டாடையீன், பார்மால்டிகைடு இரண்டும் வினைபடு பொருட்களாக பயன்படுத்தப்பட்டன.

ஆக்சோ-டையீல்சு-ஆல்டர் வினை, கிரெசுகாம்1949

வினையூக்கியின் உதவியுடனான வினைகள் உள்ளிட்ட சீரொழுங்கில்லாத ஆக்சோ-டையீல்சு-ஆல்டர் வினைகளும் அறியப்பட்டுள்ளன [2]. கார்பனைல் தொகுதியின் சிரல் இலூயிக் அமில ஒருங்கிணைப்பிற்கான பல்வேறு உத்திகள் வினையில் சார்ந்துள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. A Diels–Alder Type Reaction with Formaldehyde Thomas L. Gresham, Thomas R. Steadman J. Am. Chem. Soc., 1949, 71 (2), pp 737–738 எஆசு:10.1021/ja01170a101
  2. Tetrahedron Report number 869 Asymmetric hetero-Diels–Alder reactions of carbonyl compounds Helene Pellissier Tetrahedron 65 (2009) 2839–2877 எஆசு:10.1016/j.tet.2009.01.068