ஆக்ரா சுபா
ஆக்ரா சுபா என்பது முகலாய பேரரசின் ஒரு சுபா ஆகும்.[1] இது அக்பரின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது. வேகமாக விரிவடைந்து கொண்டிருந்த மராத்தா பேரரசால் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது வரை இது முகலாய பேரரசின் மையப் பகுதியாக இருந்தது. இதன் வடக்கே டெல்லி மற்றும் அவாத், கிழக்கே அலாகாபாத், தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் மல்வா மற்றும் அஜ்மீர் ஆகிய பகுதிகள் இருந்தன. இதன் தலைநகரம் ஆக்ரா ஆகும். முகலாய பேரரசின் ஒரு முக்கியமான நிர்வாக மையமாக ஆக்ரா விளங்கியது.
உசாத்துணை
தொகு- ↑ Abul Fazl-i-Allami (1949, reprint 1993). Ain-i-Akbari, Vol.II (English tr. by H.S. Jarrett, rev. by J.N. Sarkar), Calcutta: The Asiatic Society, p. 190