ஆங்காங்-சூகாய்-மக்காவு பாலம்
சீனா - ஆங்காங் கடல் பாலம் (Hong Kong–Zhuhai–Macau Bridge) என்பது சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள நகரான சூகாய் உடன் மக்கள் சீனக் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளான மக்காவு மற்றும் ஆங்காங் ஆகிய இரு நகரங்களையும் இணைக்கும் பாலமாகும். சூகாய், மக்காவு மற்றும் ஆங்காங் ஆகிய மூன்று நகரங்களுமே பியர்ல் ஆற்றங்கரைச் சமவெளியில் அமைந்துள்ள நகரங்களாகும். இப்பாலம் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. [1] இந்தப் பாலம் சற்றேறக்குறைய 55 கிலோமீட்டர் நீளம் உடையதாகும். இந்தப் பாலம் 6.7 கிலோமீட்டர் அளவுக்கு சுரங்க வழிப்பாதையையும் தன்னுள்ளே கொண்டுள்ளது.[2]இந்த பாலத்தைக் கட்ட 1.48 இலட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. இப்பாலம் 6.8 கோடி மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும், சீனா - ஆங்காங் இடையேயான பயண நேரத்தைக் குறைக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
உருவாக்கம்
தொகு1980 களில் ஹோப்வெல் ஹோல்டிங்சு நிறுவனத்தின் அந்நாளைய நிர்வாக இயக்குநர் கோர்டன் வு இந்தப் பாலத்திற்கான திட்டத்தை முன் வைத்தார்.[3] இப்பாலத்தின் கட்டுமானம் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. சீனத் தரப்பிலிருந்து 2009 டிசம்பர் 15 ஆம் நாளில் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.[4] இத்திட்டத்தின் ஆங்காங் பகுதி கட்டுமானம் டிசம்பர் 2011 இல் தொடங்கியுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=2129718
- ↑ https://www.thehindubusinessline.com/news/world/china-launches-hong-kong-mainland-mega-bridge/article25293916.ece
- ↑ Tsang, Denise (2018-10-23). "Tycoon’s 35-year dream finally realised as mega bridge opens". South China Morning Post. https://www.scmp.com/news/hong-kong/hong-kong-economy/article/2169864/property-tycoon-gordon-wus-35-year-dream-massive.
- ↑ https://web.archive.org/web/20130719083538/http://www.arup.com/News/2010-02_February/09_Feb_2010_Ground-breaking_HK-Zhuhai-Macao_Bridge.aspx