ஆங் சியோங் வு

தென் கொரிய பாடகர் மற்றும் நடிகர்

ஆங் சியோங் வு (ஆகத்து 25, 1995) என்பவர் தென் கொரிய நாட்டு பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர் 101 பருவம் 2 என்ற உண்மை நிலை போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் அறியப்பட்டார். மேலும் 'வண்ண வன்'[1] என்ற கொரியன் கே பாப் குழுவில் முன்னணி உறுப்பினராகுவும் உள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு முதல் 'அட் எயிட்டின்' (2019), மோர் தன் பிரண்ட்ஸ் (2020) போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஆங் சியோங் வு
தாய்மொழியில் பெயர்옹성우
பிறப்புஆகத்து 25, 1995 (1995-08-25) (அகவை 28)
இஞ்சியோன், தென் கொரியா
தேசியம்கொரியன்
படித்த கல்வி நிறுவனங்கள்டோங் சியோல் பல்கலைக்கழகம்
பணி
  • பாடகர்
  • நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2017–இன்று வரை
முகவர்பேண்டஜியோ
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)குரல்கள்
வெளியீட்டு நிறுவனங்கள்
  • பேண்டஜியோ
  • ஒய்.எம்.சி என்டர்டெயின்மென்ட்
  • ஒய்.எம்.சி]]
  • ஸ்விங்
இணைந்த செயற்பாடுகள்வண்ண வன்
Korean name
Hangul
Hanja
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்Ong Seong-u
McCune–ReischauerOng Sŏngu
கையொப்பம்
வலைத்தளம்
fantagio.kr/actors/옹성우

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

ஓங் சியோங் வு ஆகத்து 25, 1995 ஆம் ஆண்டு தென் கொரியாவில் இஞ்சியோன் என்ற நகரில் பிறந்தார். இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. இவர் குவால் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்று, அதைத் தொடர்ந்து 2014 இல் 'ஹன்லிம் மல்டி ஆர்ட் ஸ்கூல்லில்' மேல் நிலை பட்டம் பெற்றார். டாங் சியோல் பல்கலைக்கழகத்தில் நடன மற்றும் நடிப்பு சார்ந்த உயர் நிலை பட்டம் பெற்றார்.[2][3]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்_சியோங்_வு&oldid=3866234" இலிருந்து மீள்விக்கப்பட்டது