ஆசாத் சிங்
இந்திய அரசியல்வாதி
மாசுடர் ஆசாத் சிங் (Master Azad Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். வட தில்லியின் முன்னாள் மேயராகவும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்தார்.[1] 1998 ஆம் ஆண்டு முதல் ஆசிரிய அரசியலில் தீவிரமாக பங்கேற்றுள்ளார். தில்லியிலிருந்த அரசாங்க பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.[2] தனது மூத்த சகோதரர் சாகிப் சிங் வர்மாவின் வழிகாட்டுதலில், தற்போது ஆசிரிய ஒன்றியத்தில் ஆளும் குழு அமைப்பான லோக்தன்ரிக் அதியாபக் மஞ்ச் என்ற அமைப்பிற்கான அடித்தளத்தை அமைத்தார். தொடர்ந்து 3 முறை முந்திகா கிராமத்திலிருந்து பாஜக கட்சியின் சட்டமன்ற வேட்பாளராக இருந்து வருகிறார். ஆனால் இன்னும் தில்லி சட்டமன்றத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
குறிப்புகள்
தொகு- ↑ "New north mayor elected". hindustantimes.com/. Archived from the original on 5 February 2015.
- ↑ "87% voting in first teacher polls - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/delhi/87-voting-in-first-teacher-polls/articleshow/39077565.cms.