ஆசிம்-உசு-சான்
ஆசிம்-உசு-சான் (Azim-ush-Shan - டிசம்பர் 15, 1664 - மார்ச் 18, 1712), முகலாயப் பேரரசர் முதலாம் பகதூர் சாவின் மூன்றாவது மகனான இவர், பகதூர் சாவின் இரண்டாவது மனைவி மகாராசகுமாரி அம்ரிதா பாய் சாகிபா மூலம் பிறந்தார். முதலாம் பகதூர் சா இறந்தபோது, இவர் வங்காளம், பீகார், ஒரிசா போன்ற பகுதிகளின் ஆளுனராக இருந்தார். உடனடியாகவே தன்னைப் பேரரசராக அறிவித்தார். ஆனால் பின்னர் இடம்பெற்ற பதவிப் போட்டியின் விளைவாக குறுகிய காலத்திலேயே கொல்லப்பட்டார்.[1][2][3]
ஆசிம்-உசு-சான் நான்கு தடவைகள் மணம் புரிந்தார். இவருக்கு ஆறு ஆண்மக்களும் ஒரு மகளும் இருந்தனர். 1713 தொடக்கம் 1719 வரை முகலாயப் பேரரசராக இருந்த பரூக்சியார் இவரது மகனாவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Mughal title Mirza, the title of Mirza and Khan or Padshah, which were the titles of the Mongol rulers.
- ↑ Irvine, William (1971). Later Mughal. Atlantic Publishers & Distri. p. 144.
- ↑ Chatterjee, Anjali (2012). "Azim-us-Shan". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). வங்காளதேசத்தின் ஆசியச் சமூகம்.