ஆசியாவில் மதம்
பரப்பளவில் பெரியதும் அதிக மக்கட்தொகையைக் கொண்டதுமான ஆசியக்கண்டத்தில் பல்வேறு மதங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்து மதம், பௌத்தம், சமணம், சீக்கிய மதம், இசுலாம், கிறித்தவம், சிந்த்தோயிசம், தாவோயிசம் முதலான பல மதங்கள் ஆசியாவில் தான் தோன்றி வளர்ந்தன.
தர்ம மதங்கள்
தொகுஇந்து மதம்
தொகுஇந்து மதம் ஆசியக் கண்டத்தின் இரண்டாவது பெரிய மதமும் பழமையானதும் ஆகும். 100 கோடிக்கும் மேற்பட்டோர் இம்மதத்தினைப் பின்பற்றுகின்றனர். மக்கட்தொகை அடிப்படையில் இந்தியா, நேபாளம், பாலித் தீவு ஆகியவற்றில் இதுவே பெரிய மதம். பூட்டான், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை முதலிய நாடுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இந்துக்கள் வாழ்கின்றனர்.
சமணம்
தொகுசமண மதம் ஒரு இந்திய மதமாகும். சமணர்கள் பெரும்பாலும் இந்தியாவில் வாழ்ந்தாலும் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றனர்.[1] இந்தியாவின் அரசியல், பொருளாதார, அறப் பண்புகளில் சமண மதத்தின் தாக்கம் குறிப்பிடத் தகுந்தது. இந்தியாவில் உள்ள மதங்களுள் அதிகம் கல்வியறிவு பெற்றவர்கள் சமணர்களே.[2][3] சமண நூலகங்கள் இந்தியாவின் பழைமையான நூலகங்களாகத் திகழ்கின்றன.[4][5] வர்த்தமான மகாவீரரின் போதனைகளே இம்மதத்தின் வழிகாட்டுநெறிகளாக உள்ளன.
பௌத்தம்
தொகுபௌத்தம் உலகின் நான்காவது பெரிய மதமும் ஆசியாவின் மூன்றாவது பெரிய மதமும் ஆகும். சித்தார்த்த கௌதமரால் தொடங்கப்பட்ட மதம். ஆசிய மக்களில் 12% பேர் இதனைப் பின்பற்றுகின்றனர். பூட்டான், பர்மா, கம்போடியா, தாய்லாந்து, இலங்கை, திபெத், மங்கோலியா ஆகிய பகுதிகளில் இதுவே பெரும்பான்மையான மதம். சீனா, தைவான், வட கொரியா, தென் கொரியா, சிங்கப்பூர், வியட்நாம் முதலிய நாடுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புத்த மதத்தினர் வாழ்கின்றனர்.
சீக்கியம்
தொகுசீக்கிய மதம் உலகின் ஐந்தாவது பெரிய மதமாக விளங்குகிறது. ஏறத்தாழ மூன்று கோடி மக்கள் இச்சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இது குரு நானக் அவர்களால் 1500களில் தோற்றுவிக்கப்பட்டது. இது இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்குப் பகுதியிலுள்ள பஞ்சாப் பகுதியில் தோன்றியது. சீக்கியர் என்ற பெயர் மாணவன் (சீக்) என்னும் பொருள் தரும் சமஸ்கிருதச் சொல்லில் இருந்து தோன்றியது. இந்தியாவின் நான்காவது பெரிய மதமான இதனைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை இந்திய மக்கட்தொகையில் 2% ஆகும். சீக்கியர்கள் இந்தியாவினைத் தவிர பர்மா, மலேசியா, பிலிப்பைன்சு, பாக்கித்தான், ஆப்கானித்தான், சிங்கப்பூர், இந்தோனேசியா முதலான நாடுகளிலும் வாழ்கின்றனர்.
கிழக்காசிய மதங்கள்
தொகுகன்பூசியம்
தொகுதவோயிசம்
தொகுசிந்த்தோ
தொகுஇரானிய மதங்கள்
தொகுபார்சிய மதம் பாரசீகம் ஆகிய தற்பொழுதய ஈரானில் தோன்றிய மதம் . சாருஸ்டிரா என்பவரால் தோற்றுவிக்க பட்ட இந்த மதம் இஸ்லாமிய மதம் பாரசீகத்தில் பரவுதலுக்கு முன்பு பாரசீகற்கள் பின்பற்றிய சமயமாகும் .
ஆபிரகாமிய மதங்கள்
தொகுயூதம்
தொகுகிறித்தவம்
தொகுஇசுலாம்
தொகுஆசியாவின் மிகப்பெரிய சமயம் இதுவே. ஏறத்தாழ 1.1 பில்லியன் மக்கள் இதனைப் பின்பற்றுகின்றனர். பங்களாதேசம், இந்தோனேசியா, மலேசியா, பாக்கித்தான், ஆப்கானித்தான், ஈரான், ஈராக் முதலிய 27 ஆசிய நாடுகளில் இசுலாம் பெரும்பான்மை மதமாக இருக்கிறது.
மதச்சார்பற்றோர்
தொகு- ↑ Estimates for the population of Jains differ from just over four million to twelve million due to difficulties of Jain identity, with Jains in some areas counted as a Hindu sect. Many Jains do not return Jainism as their religion on census forms for various reasons such as certain Jain castes considering themselves both Hindu and Jain. The 1981 Census of India returned 3.19 million Jains. This was estimated at the time to be at least half the true number. There are an estimated 25,000-30,000 Jains in Europe (mostly in Britain), 20,000 in Africa, 45,000 plus in North America (from Dundas, Paul (2002). The Jains. Routledge. p. 271; 354. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415266062.) and 5,000 in the rest of Asia.
- ↑ "Press Information Bureau, Government of India". Pib.nic.in. 2004-09-06. பார்க்கப்பட்ட நாள் 2010-09-01.
- ↑ "Census of India 2001". Censusindia.net. பார்க்கப்பட்ட நாள் 2010-09-01.
- ↑ The Jain Knowledge Warehouses: Traditional Libraries in India, John E. Cort, Journal of the American Oriental Society, Vol. 115, No. 1 (January – March, 1995), pp. 77–87
- ↑ "History - Melbourne Shwetambar Jain Sangh Inc". Melbournejainsangh.org. Archived from the original on 2013-07-28. பார்க்கப்பட்ட நாள் 2013-07-28.