ஆசிய கால்பந்துக் கூட்டமைப்புக் கோப்பை
ஆசிய கால்பந்துக் கூட்டமைப்புக் கோப்பை (AFC Cup) என்பது ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு அங்கத்து நாடுகளிலுள்ள கால்பந்துக் கழகங்களுக்காக ஆண்டுதோறும் நடத்தப்பெறும் போட்டியாகும். ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பின் விதிகளின்படி வளர்ந்துவரும் நாடுகளிலுள்ள கால்பந்துக் கழகங்கள் இப்போட்டிக்கு தகுதி பெறுகின்றன.[1] வளர்ந்த நாடுகள் ஆசிய வாகையர் கூட்டிணைவுக்குத் தகுதிபெறும். கால்பந்து விளையாட்டில் தொடக்கநிலையில் உள்ள நாடுகளின் கழகங்கள் ஆசிய பிரசிடென்ட்சு கோப்பையில் விளையாட அனுமதிக்கப்படுவர்.
தோற்றம் | 2004 |
---|---|
மண்டலம் | ஏஎஃப்சி (ஆசியா) |
அணிகளின் எண்ணிக்கை | 32 |
தற்போதைய வாகையாளர் | Nasaf Qarshi (முதல் பட்டம்) |
2022 AFC Cup |
வளர்ந்துவரும் நாடுகள் என்பது ஆசிய கால்பந்துத் தரப்பட்டியலின்படி முதல் 14 இடங்களுக்கு வெளியேயுள்ள நாடுகளாகும். முதல் 14 நாடுகள் வாகையர் கூட்டிணைவு ஆடுவதற்குத் தகுதியுடையவை. 2009-ஆம் ஆண்டு மீள்சீரமைவுக்கு முன்னர், ஐரோப்பாவில் இருந்ததுபோல யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு மற்றும் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு போல ஆசிய வாகையர் கூட்டிணைவு மற்றும் ஏஎஃப்சி கோப்பை ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக இல்லை. 2009-லிருந்து ஏஎஃப்சி கோப்பை வெல்லும் அணியும் மற்ற ஒருசில நிபந்தனைகளை நிறைவேற்றும் அணிகளும் ஆசிய வாகையர் கூட்டிணைவில் பங்குபெறுவதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் விளையாடும். அத்தகுதிச் சுற்றப் போட்டிகளில் தோற்கும் அணிகள் ஏஎஃப்சி கோப்பையில் விளையாடுவர். வெல்வோர் வாகையர் கூட்டிணைவில் விளையாடுவர்.