ஆசிரம முறை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மனிதனின் நிறை வாழ்வு என்பது இந்து சமய முறைப்படி நூறு ஆண்டுகளாக கருதப்பட்டது. அதனாலேயே பெரியோர்கள் ஆசீர்வதிக்கும் போது சமஸ்கிருதத்தில் “ஸதமானம் பவது” சதம் என்றால் நூறு. நூறாண்டுகள் வாழ்வாயாக! என்று வாழ்த்துகின்றனர். இந்நூற்றாண்டுகால வாழ்வு நான்கு பகுதிகளாக அல்லது நிலைகளாக பிரிக்கப்படுகிறது. இதனை ஆசிரமம் என்று குறிப்பிட்டனர். அவை முறையே
1). பிரம்மச்சர்யம்
2). கிரஹஸ்தம்
3). வனப் பிரஸ்தம்
4). சந்நியாசம் என்பனவாகும்.