ஆசிரியன் பெருங்கண்ணன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆசிரியன் பெருங்கண்ணன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 239 குறிஞ்சி.
புலவர் பெயர் ஒப்புநோக்கு
தொகுநாம் புலவர் ஒண் 21-ல் குறிப்பிட்டுள்ள வெள்ளைக்கண் அத்தனார் பெயரை இங்கு ஒத்திட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.
பாடல் தரும் செய்தி
தொகுஅவன் அவளை அடைய விரும்பி அவளது வீட்டுக்கு வெளிப்புறம் வந்து நிற்கிறான். அவள் அவனைப்பற்றித் தோழியிடம் சொல்கிறாள். அவன் காந்தள் பூவில் இருந்துகொண்டு தும்பி என்னும் பொன்வண்டு ஊதும் மலைநாட்டுக்கு உரியவன். அவனை எண்ணி என் தோள் மெலிந்தது. வளையல்கள் கழன்று விழுகின்றன. இனி நாணம் என்று ஒன்று நம்மிடம் உண்டா? நமே வலிய அவனைத் தழுவிக்கொள்வோம்.
உவமை
தொகுகாந்தள் பூவில் வண்டு தேன் உண்ணும் காட்சி பாம்பு மணியை உமிழ்வது போல உள்ளது. இது இல்பொருள் உவமை.
உள்ளுறை
தொகுபூவை வண்டு ஊதும் என்பதால் அவன் அவளது தேனை நுகர்ந்தது சொல்லப்பட்டது.
அறிவியல்
தொகுபாம்பு மணி உமிழ்வது இல்லை.