ஆசிரியர் நலனுக்கான தேசிய அறக்கட்டளை

ஆசிரியர் நலனுக்கான தேசிய அறக்கட்டளை (National Foundation for Teachers) 1962 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமாகும். ஆசிரியர்கள் மற்றும் ஆதரவற்ற சூழ்நிலையில் இருக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு இந்த அமைப்பு பொறுப்பாகும். அறக்கட்டளை இந்திய அரசு மற்றும் மாநில உறுப்பினர்களிடமிருந்து நிதியுதவி பெறுகிறது.[1]

ஆசிரியர் நலனுக்கான தேசிய அறக்கட்டளை
National Foundation for Teachers' Welfare
துவங்கியது1962
தலைமையகம்பள்ளிக் கல்வி இயக்குநரகம், சாய்பாபாத்து, ஐதராபாத்து (இந்தியா), 500 004

பல்கலைக்கழகங்களில் பொறியியல், மருத்துவம் மற்றும் மேலாண்மை படிப்பதற்காக ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு அறக்கட்டளை நிதி உதவி அளித்துள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு