ஆசுபெதமைட்டு

பல்லினபல்நையோபேட்டு கனிமம்

ஆசுபெதமைட்டு (Aspedamite) என்பது []12(Fe3+2Fe2+)Nb4(ThNb9Fe3+2Ti4+O42)(H2O)9(OH)3 என்ற அணைவு வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் மிகவும் அரிய ஒரு கனிமமாகும். அத்தியாவசியமான காலியிடங்களின் இருப்பிடங்களை இவ்வாய்ப்பாடு காட்டுகிறது. இயற்கையாகத் தோன்றும் இரண்டு பல்லினபல்நையோபேட்டுகளில் இக்கனிமம் ஒன்றாகும்[1]. ஆசுபெதமைட்டின் கட்டமைப்பு இரண்டாவதாக அறியப்படும் மெனெசெசைட்டு[2][3] எனப்படும் பல்லினபல்நையோபேட்டின் கட்டமைப்புடன் Im3 என்ற இடக்குழுவைக் கொண்டு ஒத்திருக்கிறது. மேலும், ஆசுபெதமைட்டு நார்வேயில் கிடைக்கும் மற்றொரு கனிமமான எக்சோநையோபேட்டு [4] என்று வகைப்படுத்தப்படும் பீட்டராந்திரசெனைட்டுடன் கிட்டத்தட்ட ஒத்த கனிமமாக கருதப்படுகிறது.

ஆசுபெதமைட்டு
Aspedamite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடு[]12(Fe3+2Fe2+)Nb4(ThNb9Fe3+2Ti4+O42)(H2O)9(OH)3
இனங்காணல்
நிறம்பழுப்பு முதல் அடர் சிவப்பு ஆரஞ்சு
பிளப்புஏதுமில்லை
மிளிர்வுவிடாப்பிடியான ஒளிர்வு
கீற்றுவண்ணம்மிகை வெளிர் ஆரஞ்சு
ஒப்படர்த்தி4.070

மேற்கோள்கள்

தொகு
  1. "Aspedamite: Aspedamite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
  2. Cooper, M.A., Abdu, Y.A., Ball, N.A., Černý, P., Hawthorne, F.C., and Kristiansen, R., 2012. Aspedamite, Ideally []12(Fe3+,Fe2+)3Nb4[Th(Nb,Fe3+)12O42]12{(H2O),(OH)}12, a New Heteropolyniobate Mineral Species from the Herrebøkasa Quarry, Aspedammen, Østfold, Southern Norway: Description and Crystal Structure. The Canadian Mineralogist 50, 793-804; DOI: 10.3749/canmin.50.4.793
  3. "Menezesite: Menezesite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
  4. "Peterandresenite: Peterandresenite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசுபெதமைட்டு&oldid=4127800" இலிருந்து மீள்விக்கப்பட்டது