ஆடும் ஓநாயும் (விளையாட்டு)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆடும் ஓநாயும் என்னும் தமிழக நாட்டுப்புற விளையாட்டு 1950ஆம் ஆண்டுக்குப் பின்னர் படிப்படியாக மறைந்துவருகிறது.
தலைவனைப் பின்தொடர்ந்து அனைவரும் காலால் தேய்த்து அரங்கக் கட்டம் போடுவர். முதலில் தலைவன் ஓநாய். பிறர் ஆடு. ஓநாயிடம் பிடிபடாமல் ஆடுகள் ஓடும். ஓநாய் ஒரு ஆட்டைப் பிடித்தவுடன் அந்த ஆடு ஓநாயின் இடுப்பைப் பின்னால் பிடித்துக்கொண்டு ஓநாயுடன் பின்னால் ஓடவேண்டும். இப்படிப் பிடிபட்ட ஆடுகள் அத்தனையும் அடுத்தடுத்து உள்ளவர் இடுப்பைப் பிடித்துக்கொண்டு அறுபடாமல் ஓட வேண்டும். அறுபட்டால் அறுபட்டவர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவார். ஏனையோர் விளையாடுவர். பிடிபட்ட ஆடுகளை இழுத்துக்கொண்டு ஓடுவது ஓநாய்க்குக் கடினம்.
பிடிபடாமல் கடைசியில் இருப்பவர் திறமைசாலி.
மேலும் பார்க்க
தொகுமேற்கோள் நூல்
தொகுபாலசுப்பிரமணியம், இரா, தமிழர் நாட்டு-விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980