ஆடு வகைகள்
ஆடு வகைகள்
தொகுகோயம்புத்தூர் ஆடு, செங்கம் ஆடு
தொகுஇவற்றின் ரோமம் வெகு மட்டமான கம்பளிகள் நெய்யப் பயன்படுகிறது.
பால்கி அல்லது ஹஸ்தனகிரி ஆடு
தொகுஇது பாகிஸ்தானைச் சேர்ந்த வடமேற்கு மாகாணத்திலும் ஆப்கானிஸ்தானத்திலும் உள்ளது. வாலில் கொழுப்புச் சேர்ந்து மூட்டை போலிருக்கும். ரோமத்திற்கும் இறைச்சிக்கும் ஏற்றது.
நெல்லூர் ஆடு
தொகுநெல்லூர், குண்டுர் மாவட்டங்களில் உள்ளது.
மண்டியா ஆடு, ஹாசன் ஆடு
தொகுஇவை மைசூர் பீடபூமியைச் சேர்ந்தவை. ஊனுக்கு உயர் வான ஜாதிகளென்று கருதப்படுகின்றன.
மைலம்பாடி ஆடு கோவை மாவட்டத்தில் உள்ளது.
மேச்சேரி ஆடு சேலம் மாவட்டத்தில் உள்ளது.
வெள்ளாடுகள்
தொகுஇவை பாலுக்காக அதிகமாக மதிக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் ரோமத்திற்காக வளர்க்கப்படும் வெள்ளாடும் உண்டு. உலகப் புகழ்பெற்ற மொகேர்(Mohair) என்னும் துணி நெய்ய மிக மிருதுவான ரோமம் தரும் வெள்ளாட்டிற்கு அங்கோரா ஆடு என்று பெயர்.
நியூபியன் ஆடு
தொகுஇது எகிப்தைச் சேர்ந்த நியூபியா என்னுமிடத்திலும், அபிசீனியாவிலும் காணலாம். கொம்புகள் இல்லை. கீழ்த்தாடைகள் சற்று நீண்டிருக்கும். காதுகள் நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும். நிறம் சிவப்பு அல்லது கறுப்பு, பாலுக்கு ஏற்றது.
மால்ட்டா ஆடு
தொகுஇது மால்ட்டா தீவைச் சேர்ந்தது. 2.5 அடி உயரமுள்ளது. கொம்புகளில்லை. நிறம் வெண்மை, காதுகள் நீண்டு தொங்காமல் பக்கவாட்டில் தூக்கிநிற்கும். பாலுக்கு ஏற்றது. சுவிட்ஸர்லாந்து நாட்டிலே பாலுக்குச் சிறந்த சில ஜாதி ஆடுகளிருக்கின்றன. அவைகளுள் முக்கியமானவை.
டாகென்பர்கு ஆடு
தொகுசாதாரணமாகச் சிவப்பு நிறம் உடையது. கால்களும், காதுகளும், வெண்ணிறம். முகத்திலும் தலைப்பாகத்திலும் இரண்டு வெண்ணிறமுள்ள கோடுகள் உண்டு.
சானே ஆடு
தொகுஇவ்வகை ஆடுகளுக்கு கொம்புகளில்லை. பால் அதிகமாகக் கொடுக்கும்.
ஆல்ப்பைன் ஆடு
தொகுஆல்ப்ஸ் மலைப் பிரதேசத்தைச் சேர்ந்தது. பாலுக்கு உகந்தது.
ஜம்னபாரி ஆடு
தொகுஇது உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தது ; பருத்தது. மூக்கு வில் போல் வளைந்திருக்கும் ; ஓர் அடி நீளமுள்ள, தொங்குகின்ற காதுகளுடையது. சிவப்பும் கறுப்பும் கலந்த நிறம், பாலுக்கும் ஊனுக்கும் உகந்த ஜாதி.
சூரத் ஆடு
தொகுஇது சூரத்துப் பிரதேசத்தைச் சுற்றியுள்ளது. மட்டமானது. வெண்ணிறம் கொண்டது. கொம்பற்றது. பால் அதிகமாகக் கொடுக்கும் கடாவுக்குத் தாடியுண்டு.
===தலைச்சேரி அல்லது மலையாள ஆடு=== இது பல நாட்களாக வளர்க்கப்பட்டு வரும் கலப்பு ஜாதி ஆடு. சூரத், நியூபியன் முதலிய ஆடுகளுக்கும் உள்நாட்டு ஆடுகளுக்கும் பிறந்தது; வெண்மையும் கறுப்பும் கலந்த நிறம், நாள் ஒன்றுக்கு 1 முதல் 1.25 படி பால் கொடுக்கும்.