ஆட்ரியா சாண்டோஸ்

ஆட்ரியா சாண்டோஸ் (Ádria Santos) (பிறப்பு: 1974 ஆகத்து 11) பிரேசிலிலிருந்து வந்து இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் விரைவோட்டத்தில் விளையாடி ஓய்வுபெற்ற வீரர் ஆவார். குறைந்த அளவில் பார்வையற்றவராகப் பிறந்த இவர் 1994 க்குள் பார்வையை முற்றிலுமாக இழந்தார். 1988 முதல் 2008 வரை தொடர்ச்சியாக ஆறு இணை ஒலிம்பிக்கில் டி 11 வகை போட்டிகளில் பங்கேற்ற இவர் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குறைந்தது ஒரு பதக்கத்தை வென்றார். 2016 கோடைகால இணை ஒலிம்பிக்க்கின் ஆரம்ப விழாவில் இறுதி ஒலிம்பிக் ஜோதியை தாங்கினார்.

ஆட்ரியா சாண்டோஸ்
2016 இணை ஒலிம்பிக்கில் சாண்டோஸ் (வலது)
தனிநபர் தகவல்
பிறப்பு11 ஆகத்து 1974
நான்கியூ பிரேசில்
விளையாட்டு
விளையாட்டுஇணை ஒலிம்பிக் தடகளம்
மாற்றுத்திறன் வகைப்பாடுடி11 (வகைப்பாடு)
நிகழ்வு(கள்)விரைவோட்டம்
பதக்கத் தகவல்கள்
நாடு  பிரேசில்
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1988 சியோல் 100மீ பி12
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1988 சியோல் 400மீ பி12
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1988 சியோல் 200மீ டி10
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1988 சியோல் 400மீ பி12
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1988 சியோல் 400மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் 1992 பார்செலோனா 100மீ – பி12
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1996 அட்லான்டா 100மீ – டி10
தங்கப் பதக்கம் – முதலிடம் 2000 சிட்னி 100மீ – டி12
தங்கப் பதக்கம் – முதலிடம் 2000 சிட்னி 200மீ – டி11
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2000 சிட்னி 400மீ – டி11
தங்கப் பதக்கம் – முதலிடம் 2004 ஏதென்ஸ் 100மீ – டி12
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2004 ஏதென்ஸ் 200மீ – டி11
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2004 ஏதென்ஸ்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2008 பெய்ஜிங் 100மீ – டி11

2003 ஆம் ஆண்டில் இவர்தனது வழிகாட்டியாகவும் பயிற்சியாளராகவும் பணியாற்றிய முன்னாள் போல் வால்டர் ரபேல் என்பவரை மணந்தார். இந்தத் தம்பதியருக்கு பார்பரா என்ற ஒரு மகள் உள்ளார்.

ஆரம்ப வரலாறு தொகு

1974 ஆம் ஆண்டில் பிறந்த பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இவர் பி 2 பிரிவில் விரைவோட்ட வீர்ரராக அறிமுகமானார் (தனது 14 வயதில், 1988 ஆம் ஆண்டில் சியோல் இணை ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையற்றவர் பிரிவில் அறிமுகமானார்) 1994 ஆம் ஆண்டில், கண்பார்வையின் மொத்த இழப்பு காரணமாக, இவர் முழுமையான பார்வைக் குறைபாடு (டி 10, பின்னர் டி 11) பிரிவில் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். இவரது ஓட்டங்களில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், மிகவும் அரிதாக 800 மீட்டர், 4 × 100 மீட்டர் ரிலே ஆகியவை அடங்கும்.

1988 முதல் 2008 வரை கோடைகால இணை ஒலிம்பிக் போட்டிகளின் அனைத்து பதிப்புகளிலும் பங்கேற்ற இவர் 13 பதக்கங்களைப் பெற்றார். அவற்றில் 4 தங்கம், 8 வெள்ளி, ஒரு வெண்கலம். இவர் 1994 முதல் 2011 வரை இணை ஒலிம்பிக் தடகள உலகப் போட்டிகளின் பல்வேறு பதிப்புகளிலும், பரப்பன்-அமெரிக்க விளையாட்டுகளின் மூன்று பதிப்புகளிலும் போட்டியிட்டு, தொடர்ந்து மேடையைப் பெற்றார். 2011 ஆம் ஆண்டில் இவருக்கு நடந்த ஒரு அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து இவரது சர்வதேச தடகள வாழ்க்கையை முடிவுக்கு வந்தது.

2012 ஆம் ஆண்டில் சர்வதேச இணை ஒலிம்பிக் அமைப்பிலும், பிரேசிலிய இணை ஒலிம்பிக் அமைப்பிலும், கிளோடோல்டோ சில்வா என்பவருடன் சேர்ந்து பிரேசிலைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இலண்டனில் நடந்த இணை ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் (ஆகத்து 29) அணிவகுத்துச் சென்றார். மேலும், இரண்டு விளையாட்டு வீரர்களும் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்றனர்.

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்ரியா_சாண்டோஸ்&oldid=3842187" இலிருந்து மீள்விக்கப்பட்டது