ஆண்டிப்புலவர்

ஆண்டிப்புலவர் நன்னூலுக்கு விருத்தப்பாவினால் உரை இயற்றியவர்.[1].இவர் ஆசிரிய நிகண்டும் இயற்றினார். உரையறி நன்னுால் இன்று கிடைக்கவில்லை.

வாழ்ந்த காலம்

தொகு

தொண்டை மண்டலத்தில் செஞ்சிக்கு அருகேயுள்ள ஊற்றங்கால் என்பது ஆண்டிப்புலவரின் பிறப்பிடமும் இருப்பிடமும் ஆகும்.[2].

சிறந்த ஆசிரியர்

தொகு

சிறந்த தமிழறிஞராக விளங்கினார். தந்தையரிடம் கல்வி பயின்ற இவர் கல்வியிற் சிறந்து பலருக்கு ஆசிரியராகத் திகழ்ந்தார்.[3]

நன்னுால் சூத்திர விளக்கம்

தொகு
செம்மையும் கருமையும் பசுமையும் வெண்மையும்
திண்மையும் நுண்மையும் யுடனே
சிறுமையும் பெருமையும் குறுமையும் நெடுமையும்
தீமையும் துாய்மையும் அலால்
வெம்மையும் குளிர்மையும் கொடுமையும் கடுமையும்
மேன்மையும் கீழ்மையும் யும்பின்
மெய்ம்மையும் வறுமையும் பொய்ம்மையும் வன்மையும்
மெனமையும் நன்மை யும்சொல்
ஐம்மையும் பழமையும் புதுமையும் இனிமையும்
அணிமையும் நிலைமை யும்நேர்
ஆண்மையும் மும்மையும் ஒருமையும் பன்மையும்
அறுமையும் இருமையும் மிக்க
கைம்மையும் கூர்மையும் கேண்மையும் சேண்மையும்
கடிய வளமையும் இளமையும்
காணரிய முதுமையும் பண்புப் பகாப்பதம்
காட்டுமின் னனைய மாதே

[4]

மேற்கோள்கள்

தொகு
  1. மு.வை.அரவிந்தன் - உரையாசிரியர்கள் - பக்கம் 569
  2. மு.வை. அரவிந்தன் - உரையாசிரியர்கள் - வெளியீட்டு எண்-1444
  3. மு.வை. அரவிந்தன் - உரையாசிரியர்கள் வெளியீட்டு எண் 1444
  4. மு.வை.அரவிந்தன் - உரையாசிரியர்கள் -வெளியீட்டு எண்1444 - பக்கம் 569
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிப்புலவர்&oldid=2748650" இலிருந்து மீள்விக்கப்பட்டது