ஆண்டெர்சு கசுடாப் ஏகெபெர்க்

ஆண்டெர்ஸ் கஸ்டாஃப் ஏகெபெர்க் (Anders Gustaf Ekeberg) ஸ்டாக்ஹோம், சுவீடன், 16 சனவரி 1767 – உப்சாலா, சுவீடன், 11 பெப்ரவரி 1813) ஒரு சுவீடிய பகுப்பாய்வு வேதியியலாளர் ஆவார். இவர் தாண்டலம் என்ற தனிமத்தை 1802 ஆம் ஆண்டில் கண்டறிந்தார். [1] [2] [3] இவர் குறிப்பிடத்தக்க அளவிற்கு கேட்டல் குறைபாடு உடையவராக இருந்தார். [4]

கல்வி

தொகு

ஆண்டெர்சு கஸ்டாவ் ஏகெபெர்க் ஒரு சுவீடிய விஞ்ஞானியும், கணிதவியலாளரும் மற்றும் கிரேக்க இலக்கியத்தில் நிபுணரும் ஆவார். இவரது தந்தை, ஜோசப் எரிக் ஏகெபெர்க், ஒரு கப்பல் கட்டுபவர். இவரது மாமா கார்ல் கஸ்டாஃப் எகெபெர்க் ஆவார் . [5]

ஆண்டெர்ஸ் கஸ்டாவ் ஏகெபெர்க் கல்மார், சோடெராக்ரா, வெஸ்டர்விக் மற்றும் கார்ல்ஸ்க்ரோனா ஆகிய பள்ளிகளில் பயின்றார். இவர் ஒரு திறமையான மாணவர் ஆவார். 1784 ஆம் ஆண்டில் உப்சாலா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1788 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். இவரது ஆய்வறிக்கையானது விதைகளிலிருந்து எண்ணெய்களைப் பிரித்தெடுப்பது பற்றி விளக்கியிருந்தது. 1789 மற்றும் 1790 ஆம் ஆண்டில், இவர் கேட்டு செருமனிக்குப் பயணம் செய்து பயின்றார். மார்ட்டின் ஹென்ரிக் கிளாப்ரோத்தின் விரிவுரைகளை பெர்லினிலும் கிறிஸ்டியன் எஹ்ரென்பிரெட் கிரிய்ப்சின் விரிவுரைகளை கிரிய்ப்ஸ்வால்டிலும் கேட்டிருந்தார்.[6]1794

தொழில்

தொகு

1794 ஆம் ஆண்டில், ஆண்டர்ஸ் கஸ்டாவ் எகெபெர்க் உப்சாலாவில் கற்பிக்கத் தொடங்கினார். வேதியியல் பெயரிடலை முறைப்படுத்துவதற்கான அந்துவான் இலவாசியேயின் முன்மொழிவுகளுக்கு இவர் ஆதரவாளராக இருந்தார். ஐதரசன், நைட்ரசன் மற்றும் ஆக்சிசன் போன்ற வேதியியல் தனிமங்களுக்கான நவீன பெயர்களை சுவீடிய மொழியில் அறிமுகப்படுத்துவதற்கான முதல் கட்டுரையை 1795 ஆம் ஆண்டில் இவரும் பெஹ்ர் வான் அஃப்செலியசும் "தற்போதைய வேதியியல் அறிவியல் நிலை" என்ற பெயரில் வெளியிட்டனர். [6]

1794 ஆம் ஆண்டில் வேதியியலைக் கற்பிக்கும் ஒரு பணியில் நியமிக்கப்பட்ட இவர் 1799 ஆம் ஆண்டில் வேதியியலில் டார்பெர்ன் பெர்க்மேன் ஆய்வகத்தில் பரிசோதனையாளராக பணியாற்றினார். [7] 1798 ஆம் ஆண்டில் இவர் எரிதல் கோட்பாட்டைப் பற்றி விரிவுரை செய்தார். 1799 ஆம் ஆண்டில், இவர் இராயல் சுவீடிய அறிவியல் அகாதெமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [5]

ஏகெபெர்க் தனது வாழ்நாள் முழுவதும் உடல்நலமின்மையால் அவதிப்பட்டார். இவரது குழந்தைப் பருவத்தில் கடுமையான குளிர் அவரது செவித்திறனைப் பாதித்தது. ஆண்டுகள் செல்லச்செல்ல, இவரது கேட்கும் திறன் மேலும் பலவீனமடைந்தது. இக்குறைபாடு, இவரது கற்பித்தல் பணிக்கு இடையூறாக இருந்தது. மேலும், ஆய்வகத்தில் வாயு வெடிப்பொன்றில் ஒரு கண்ணில் பார்வை பறிபோனது. [8]

ஏக்பெர்க் இவரது நண்பர்கள் மற்றும் மாணவர்களால் ஒரு கனிவான மற்றும் மென்மையான மனிதராக சித்தரிக்கப்பட்டார். இவர் 46 வயதில், திருமணமாகாத நிலையில் இறந்தார்.[9]

ஆராய்ச்சி

தொகு
 
இட்டெர்பியின் கனிமமான இட்ரோடாண்டலைட்டு
 
தாண்டலம் என்ற தனிமம்

ஏகெபெர்க் யெட்டர்பி மற்றும் ஃபலூனில் காணப்படும் பல கனிமங்களை ஆய்வு செய்தார். 1802 ஆம் ஆண்டில் இவர் பின்லாந்தின் கிமிட்டோவில் கிடைத்த தாண்டலைட்டின் மாதிரிகளையும் சுவீடனின் இட்டர்பியிலிருந்து கிடைத்த இட்ரோடாண்டலைட்டு ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்தார். இரண்டிலுமிருந்தும் தாண்டலம் என்ற தனிமத்தை கண்டுபிடித்த பெருமை இவரையே சாரும்.[5]

ஏக்பெர்க் புதிய தனிமத்திற்கு புராண பண்டைய கிரேக்க தேவதையான டான்டலசின் பெயரைக் கொடுத்தார். புராணத்தின் படி, அவர் கழுத்து வரை தண்ணீரில் நிற்க வேண்டி நித்திய விரக்திக்கு அவர் தீர்ப்பளிக்கப்பட்டார், ஆனால் அவர் தண்ணீரைக் குடிக்க முயன்றபோது தண்ணீர் குறைந்தது. [10]

ஆண்டெர்சு கசுடாவ் எகெபெர்க் தாண்டலம் பரிசு

தொகு

2018 ஆம் ஆண்டில் டான்டலம்-நியோபியம் சர்வதேச ஆய்வு மையம், ஆண்டெர்சு கஸ்டாஃப் எகெபெர்க் தாண்டலம் பரிசை ("எக்பெர்க் பரிசு") நிறுவியது. இப்பரிசானது டான்டலம் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிப்பதற்காக ஆண்டுதோறும் வழங்கப்படும். இந்தப் பரிசு தாண்டலம் தயாரிப்புகளின் பல தனித்துவமான பண்புகள் மற்றும் அவை சிறந்து விளங்கும் பயன்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும். [11] ஏக்பெர்க் பரிசின் தொடக்க வெற்றியாளர் யூரி ஃப்ரீமேன், அவரது புத்தகமான "தாண்டலம் மற்றும் நியோபியம்-அடிப்படையிலான மின்தேக்கிகள்" (ஸ்பிரிங்கர், 2018) என்ற படைப்பிற்காக இப்பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [12] [13]

மேற்கோள்கள்

தொகு
  1. Marshall, James L.; Marshall, Virginia R. (2013). "Rediscovery of the Elements: Columbium and Tantalum". The Hexagon: 20–25. http://www.chem.unt.edu/~jimm/REDISCOVERY%207-09-2018/Hexagon%20Articles/columbium%20and%20tantalum.pdf. பார்த்த நாள்: 30 December 2019. 
  2. "The Discovery of the Elements: VII. Columbium, Tantalum, and Vanadium". Journal of Chemical Education 9 (5): 863–884. 1932. doi:10.1021/ed009p863. Bibcode: 1932JChEd...9..863W.  - subscription required
  3. Academie-Adjuncten och Chemie-Labratorn i Upsala (1812). "Mag. And. Gust. Ekebergs Biographie" (in se). Kungliga Svenska Vetenskapsakademiens Handlingar 23: 276–280. https://www.biodiversitylibrary.org/item/107441#page/315/. 
  4. Lang, Harry G. (June 2002). "Book Review". Isis 93 (2): 356–357. doi:10.1086/345053. https://archive.org/details/sim_isis_2002-06_93_2/page/356. 
  5. 5.0 5.1 5.2 Weeks, Mary Elvira (1956). The discovery of the elements (6th ed.). Easton, PA: Journal of Chemical Education.Weeks, Mary Elvira (1956). The discovery of the elements (6th ed.). Easton, PA: Journal of Chemical Education.
  6. 6.0 6.1 Lundgren, Anders (1988). "The New Chemistry in Sweden: The Debate That Wasn't". Osiris 4 The Chemical Revolution: Essays in Reinterpretation: 146–168. doi:10.1086/368676. 
  7. Debus, Allen G. (1968). World Who's who in Science: A Biographical Dictionary of Notable Scientists from Antiquity to the Present. Marquis-Who's Who. p. 516.
  8. Jorpes, J. Erik (1966) Jac. Berzelius – his life and work; translated from the Swedish manuscript by Barbara Steele. Stockholm: Almqvist & Wiksell, 1966. (Reissued by University of California Press, Berkeley, 1970 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-01628-9)
  9. Lang, Harry G. (1995). Deaf Persons in the Arts and Sciences: A Biographical Dictionary. Rochester Institute of Technology.
  10. "Early history". Tantalum-Niobium International Study Center (T.I.C.). பார்க்கப்பட்ட நாள் 7 December 2019.
  11. "The Anders Gustaf Ekeberg Tantalum Prize". Tantalum-Niobium International Study Center (T.I.C.). பார்க்கப்பட்ட நாள் 7 December 2019.
  12. "Ekeberg TIC Prize 2018 Winner Announced: Dr Yuri Freeman for "Tantalum and Niobium-Based Capacitors"". Passive Components. September 11, 2018. பார்க்கப்பட்ட நாள் 7 December 2019.
  13. "Milestone For Tantalum & Niobium Industry". EXOTech. September 21, 2018. பார்க்கப்பட்ட நாள் 7 December 2019.