ஆதிகாலத் தனிமங்கள்
ஆதிகாலத் தனிமங்கள் (Metals of antiquity) என்பவை மக்கள் ஆதிகாலந்தொட்டே கண்டறிந்து பயன்படுத்திய தனிமங்களைக் குறிக்கும். தங்கம், வெள்ளி, தாமிரம், வெள்ளீயம், ஈயம்,இரும்பு, பாதரசம் ஆகியவை பண்டைய காலத்தில் அடையாளம் காணப்பட்டு பயன்படுத்தப்பட்ட ஏழு உலோகங்கள் ஆகும். இந்த ஏழு உலோகங்களிலிருந்துதான் நவீன உலகம் உருவாகியிருக்கிறது. 13 ஆம் நூற்றாண்டில் ஆர்சனிக் கண்டுபிடிக்கப்படும் வரை அவை மட்டுமே அறியப்பட்ட அடிப்படை உலோகங்களாக இருந்தன.
தனிச்சிறப்புகள்
தொகுஉருகுநிலை
தொகுபொதுவாக இரும்பைத் தவிர ஆதிகாலத் தனிமங்கள் குறைந்த உருகுநிலை கொண்டவையாக உள்ளன.
- பாதரசம் −38.829 °செல்சியசு (-37.89 °பாரன்கீட்டு)[1] (அறைவெப்பநிலையில் நீர்மம்).
- வெள்ளீயம் - 231 °செல்சியசு (449 ° பாரன்கீட்டு)[1]
- ஈயம் - 327 °செல்சியசு (621 °பாரன்கீட்டு )[1]
- வெள்ளி - 961 °செல்சியசு (1763 ° பாரன்கீட்டு)[1]
- தங்கம் - 1064 °செல்சியசு (1947 ° பாரன்கீட்டு)[1]
- தாமிரம் - 1084 °செல்சியசு (1984 ° பாரன்கீட்டு)[1]
- இரும்பு - 1538 °செல்சியசு (2800 ° பாரன்கீட்டு),[1] பண்டையகாலத்தில் உருக்கமுடியாதது என நம்பப்பட்டது.
பிரித்தெடுத்தல்
தொகுஆதிகாலத் தனிமங்களாக இருந்தாலும் வெள்ளீயமும் ஈயமும் பூர்வீகமாகத் தோன்றியவை என்றும் தங்கமும் வெள்ளியும் இயற்கையில் கண்டுபிடிக்கப்பட்டவை என்றும் கருதப்பட்டன.
- தங்கமும் வெள்ளியும் அவற்றின் இயற்கைத் தோற்றத்திலேயே தோன்றுகின்றன.
- பாதரசச் சேர்மங்களை குறைந்த வெப்பநிலைக்கு சூடாக்கி ஒடுக்குவதால் பாதரசம் கிடைத்தது.
- வெள்ளீயம் மற்றும் இரும்பு ஆக்சைடுகளாகக் கிடைத்தன. கார்பனோராக்சைடுடன் சேர்த்து 900 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தி ஒடுக்குவதால் இவை பிரித்தெடுக்கப்பட்டன.
- தாமிரமும் ஈயமும் வறுத்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதால் கிடைத்தன.
அரிதானவை
தொகுஆதிகாலத்தில் இத்தனிமங்கள் அறியப்பட்டாலும் இவை யாவும் பொதுவாக ஒரே அளவில் காணப்படவில்லை:
- இரும்பு 4 ஆவது இடம் (நிறையில் 4.1%)
- தாமிரம் 26 ஆவது இடம் (மில்லியனுக்கு 50 பகுதிகள்)
- ஈயம் 37ஆவது (மில்லியனுக்கு 14 பகுதிகள் )
- வெள்ளீயம் 49 ஆவது (மில்லியனுக்கு 2.2 பகுதிகள்)
வெள்ளி 65 ஆவது (பில்லியனுக்கு 70 பகுதிகள்) பாதரசம் 66 ஆவது (பில்லியனுக்கு50 பகுதிகள்) தங்கம் 72 ஆவது ( பில்லியனுக்கு1.1 பகுதிகள்)
ஆதிகாலத்தில் இவை அறியப்பட்டாலும் உறுதியாகத் தெரியக்கூடிய அளவில் இருந்தன.
குறியீட்டுவாதம்
தொகுஅறியப்பட்ட உலோகங்கள் ஒவ்வொன்றும் ஏழு வானுலகப் பொருளாகவும், வாரத்தின் ஒரு நாளாகவும் கருதப்பட்டன.
Metal | Body | Day of Week |
---|---|---|
தங்கம் | சூரியன் | ஞாயிற்று கிழமை |
வெள்ளி | நிலா | திங்கட் கிழமை |
இரும்பு | செவ்வாய் | செவ்வாய் கிழமை |
பாதரசம் | புதன் | புதன் கிழமை |
வெள்ளீயம் | வியாழன் | வியாழக் கிழமை |
தாமிரம் | வெள்ளி | வெள்ளிக் கிழமை |
ஈயம் | சனி | சனிக் கிழமை |