ஆதி சைவர்

(ஆதிசைவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆதிசைவர்கள் வேதங்களோடு ஆகமங்களையும் கற்ற பிராமணர்கள் ஆவர். வேதத்தைப் பொதுவாகவும், சிவாகமத்தைச் சிறப்பாகவும் ஓது தலையே தொழிலாகக் கொண்டு, சிவபெருமானைச் சிவாகம மந்திரங்களால், சிவாகம விதிப்படி வழிபடுவோர் `ஆதி சைவர்` எனவும் பெயர் பெறுவர். மகாசைவரும், ஆதிசைவரும் உபநயனமும் பெற்று வேதாகமங்களை ஓதுதலையே தொழிலாக உடைமையால், `அந்தணர்` எனவும் படுவர். ஆகவே, மகா சைவர் `மகாசைவ அந்தணர்` என்றும், ஆதி சைவர் `ஆதிசைவ அந்தணர்` என்றும் சொல்லப்படுவர். இவருள் மகாசைவ அந்தணர் சிவாகமவழி நில்லா மையால், அவருக்கு ஆசாரியாபிடேகமும், அதன்வழி வரும் ஆசிரியத் தன்மையும் இல்லை. அதனால், அவர் சைவரல்லாத பிறர்க்கே ஆசிரியராதற்கு உரியர். ஆதி சைவ அந்தணர் சிவா கமத்தையே சிறப்பாக ஓதி அவற்றின்வழி நிற்றலால், அவருக்கே அபிடேகமும், அதன்வழி ஆசிரியத் தன்மையும் பெறும் உரிமை உண்டு.[1] [2] சைவ ரைவராவார் ஆதி சைவர், மகா சைவர், அநுசைவர், அவாந்தரசைவர், பிரசவசைவர் என்போரென்றும்; அநாதி சைவனாகிய சிவனை யருச்சிக்கும் சிவவேதியர் ஆதி சைவரென்றும்; சிவ தீக்கை பெற்ற வைதிகப் பிராமணர் மகா சைவரென்றும், இங்ஙனமே சிவ தீக்கை பெற்ற ஏனையர் ஏனைய சைவப் பெயர்கட்கு உரிய ராவாரென்றும் கூறுபர். ஆதி சைவப் பெயரொன்றுமே இப்பொழுது வழக்கிலுள்ளது.[3] இவர்களை சிவாச்சாரியார்கள் ஆதி சைவர் எனப்படும் சிவமறையோர். 'சிவா சாரியார்' என்று சொல்லப்படும் இவர்கள், சிவபெருமானைச் சிவாகமங்களின்வழித் தம் இல்லங்களில் ஆன்மார்த்தமாகவும், சிவாலயங்களில் பரார்த்தமாகவும் பூசை செய்பவர்கள்.[4], குருக்கள், சிவபிராமணர் 10ஆம் நூற்றாண்டு உடையார்குடி கல்வெட்டு, [5], சிவவேதியர்[6], சிவமறையோர்[7], சித்திரமேழி பட்டர்[8], சிவதுவிஜர் என்றும் பிற பெயர்களால் கல்வெட்டுகள், இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன .[9]. இவர்கள் சிவனின் ஐந்து முகங்களில் இருந்து நேரடியாகத் தோன்றியவர்கள்[10] என்று சிவாகமங்கள் புகழ்கின்றன. இவர்களில் ஐந்து கோத்திரங்கள் உண்டு.[11]

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_சைவர்&oldid=3848117" இலிருந்து மீள்விக்கப்பட்டது