ஆதித்தமிழர் பேரவை
ஆதித்தமிழர் பேரவை (Aathi Thamizhar Peravai) தமிழ்நாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, குறிப்பாக அருந்ததியர் சமூக மக்களுக்காக இயங்கும் ஒரு அமைப்பாகும். இதன் நிறுவனர் மற்றும் தலைவர் இரா. அதியமான்.[1] ஆதித்தமிழர்களின் பொருளாதார, பண்பாட்டு, சமூக தரத்தை உயர்த்துவதே இந்த அமைப்பின் நோக்கமாகக் கூறப்படுகிறது. இந்த அமைப்பு அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்சு ஆகியோரை தனது வழிகாட்டியாகக் கொள்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 தொகு
2021 சட்டமன்றத் தேர்தலில், திமுகவுடன் கூட்டணி அமைத்து ஒரு தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.[2]
மேற்கோள்கள் தொகு
- ↑ "திமுகவிற்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு". 25 சனவரி 2021 இம் மூலத்தில் இருந்து 2021-04-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210414081335/https://www.thanthitv.com/News/Politics/2021/01/25103801/2072655/Adithya-Tamil-Assembly-supports-DMK.vpf.vpf.
- ↑ திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலைக் கட்சிக்கு தலா ஒரு தொகுதி; உதயசூரியன் சின்னத்தில் போட்டி: ஒப்பந்தம் கையெழுத்து. தி ஹிந்து நாளிதழ். 08-மார்ச் -2021. https://www.hindutamil.in/news/tamilnadu/642919-dmk-shares-each-1-seat-with-3-parties.html.