ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்
ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் மயிலாப்பூர்ப் பகுதியைக் கடல்கொண்ட கி. பி. 1600-ஆம் ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட நூல். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. [1]
தமிழ்ச்சமணர் தமிழர்க்கு அறமும், தமிழுக்கு இலக்கணமும் தருவதில் கவனம் செலுத்திவந்தனர். சீவக சிந்தாமணி, சூளாமணி, நீலகேசி போன்ற காப்பியங்களையும் பாடினர். அவர்கள் சிற்றிலக்கியங்களில் அதிக நாட்டம் காட்டவில்லை. என்றாலும், திருநூற்றந்தாதி, திருக்கலம்பகம் போன்ற நூல்களும் பாடியுள்ளனர். அந்த வகையில் பாடப்பட்ட சிற்றிலக்கியமே இந்தப் பிள்ளைத்தமிழ்.
ஆதிநாதர் விருஷபதேவர் என்பவர் விதனாபுரி என்னும் அயோத்தியில் இருந்துகொண்டு ஆண்ட மன்னர். சமணர். இந்தப் பிள்ளைத்தமிழ் இவர்மீது பாடப்பட்டது.
- குறிப்புகள்
- நூல் பிள்ளைத்தமிழ் இலக்கண மரபுப்படி 10 பருவம், 100 பாடல் என்று அமைந்துள்ளது.
- சந்தப்பாடல்கள் பருவந்தோறும் மாறி வருகின்றன.
- ஆதிநாதரைப் பிரமன், விஷ்ணு, சிவன் என்றே நூல் குறிப்பிடுகிறது.
- ஆர்ப்பாகை, தஞ்சை, வாழைப்பந்தல், திருமலை, திருமயிலை, பறம்பாபுரி, திருக்கோயில் (தில்லை) ஆகிய ஊர்களைச் சமணத் திருப்பதிகளாகக் குறிப்பிடுகிறது.
- சிறுதேர்ப் பருவத்தில் தேரின் உறுப்புகள் தருமச் சக்கரங்களோடு ஒப்பிடப்பட்டுள்ளன.
- எடுத்துக்காட்டுப் பாடல் பகுதி
பற்றா பியலும் கேவலத்தின்
- பணிந்தீ சாளன் எனப்போற்றி
- பரிநிரு வான பதவிதனில்
- பாரோர் புகழ்தற் புருடனென
உற்றுப் பஞ்ச கலியாணம்
- உடைய பெருமாள் வருகவே
- உலகப் பெருமாள் மறைப்பெருமாள்
- உகாதிப் பெருமாள் வருகவே.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
தொகு- ↑ ஆதிநாதர் பிள்ளைத்தமிழ், ஆதிநாதர் பதிப்பகம், 1956