ஆதிப் பொதுவுடைமை

ஆதிப் பொதுவுடைமை என்பது மனித நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப காலங்களில் காணப்பட்ட ஒரு சமுதாய ஒழுங்கமைப்பு ஆகும்.

இந்த ஒழுங்கமைப்பு நிலவிய காலத்தில் மனிதர் குழுக்களாகவும் குலங்களாகவும் வாழ்ந்துவந்தனர். மானிடவியல் ஆய்வுகளின் அடிப்படையில், இச்சமுதாய ஒழுங்கமைப்பில் பெண்ணே குலங்குழுக்களுக்கு தலைமை தாங்குபவளாகவும், தேடிப்பெறப்படும் பண்டங்கள் யாவும் குழுக்களிடையே சமமாக பகிரப்பட்டு நுகரப்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. குழுக்களின் கருவிகள், உணவு, உடை அனைத்தும் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிப்_பொதுவுடைமை&oldid=1777649" இலிருந்து மீள்விக்கப்பட்டது