ஆத்தர் ஆஃப் பிளாண்ட் நேம்ஸ்
ஆத்தர் ஆஃப் பிளாண்ட் நேம்ஸ் (Authors of Plant Names) என்பது ரிச்சர்ட் கென்னெத் ப்ருமிட் மற்றும் சி. ஈ பவல் ஆகியோரால் எழுதப்பட்டது. இது முதன்முதலில் 1992-இல் வெளியிடப்பட்டது. இதில் தாவரவியல் அறிஞர்களால் நல்ல முறையில் விளக்கப்பட்ட தாவரச்சிற்றினத்திற்கு அவருடைய பெயர்ச்சுருக்கம் தாவரப்பெயரின் இறுதியில் கொடுக்கப்படும். அப்படிப்பட்ட பெயா்ச்சுருக்கங்களை கொண்டு இது பதிப்பிக்கப்பட்டது.[1][2] இத்தரவுத்தளம் தற்பொழுது அகில உலக தாவரப்பெயர்கள் அட்டவணை (International Plant Names Index) என்ற பெயரில் இயங்கலையில் (ஆன்லைன) பராமரிக்கப்படுகிறது..[3] ஒரு சிற்றினத்தின் முழுப்பெயரைக் கொடுக்கும்போது ஒரே குடும்பப் பெயர்களைக் கொண்ட ஆசிரியர்களின் பெயரக் குழப்பத்தை தவிர்ப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட பெயர்ச்சுருக்கத்தை இத்தளம் அளிக்கிறது. பூக்கும் தாவரங்களான ஆஞ்சியோஸ்பெர்ம்கள், ஜிம்னோஸ்பெர்ம்கள், பெரணிகள், பிரையோபைட்டுகள், பாசிகள், பூஞ்சைகள், மற்றும் தொல்லுயிர் தாவரங்களை சிறந்த முறையில் விவரித்த தாவரவியல் ஆசிரியர்கள் பற்றிய தகவல்களை இத்தளம் அளிக்கிறது.[1][3] 1992-க்கு முன்பு வரை வகைப்பாட்டியல் இலக்கியத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் பல பெயர் சுருக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தது.
தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறைகள்(ICN ) என்ற அமைப்பு பாசிகள், பூஞ்சைகள், மற்றும் தாவரங்களுக்கான பெயரையும் அதன் ஆசிரியர் பெயர் சுருக்கத்தையும் கொண்டுள்ளது. ஆனால் தாவரங்களுக்கான பெயர்களைப் பயன்படுத்தும்போது ஆசிரியருக்கான பெயர்ச்சுருக்கம் தேவையில்லை. தவறான முறையில் (நாமென் ஆம்பிகுவம்) உள்ள ஆசிரியர் பெயர் சுருக்கங்களை கண்டறிய ICN என்ற அமைப்பு Brummitt & Powell’s Authors of plant names (1992) என்ற புத்தகத்தையும், வலைதளங்களான International Plant Names Index(www.ipni.org), Index Fungorum (www.indexfungorum.org) பரிந்துரைக்கிறது.[4] புருமித் மற்றும் போவெல் போன்ற ஆசிரியா்கள் அகில உலக அளவில் பிரபலமாகாவிட்டாலும் ஆசிரியர் பெயர்ச் சுருக்கம் அளிக்கப்படாத காலத்தில் தாவரங்களை விவரித்துள்ளார்கள்.[1] ஆனால் ஒரு தாவரத்தின் உண்மையான தகவல்களை தெரிந்துகொள்ள ஆசிரியர் பெயர்ச்சுருக்கத்தை விட முழுப்பெயரே சிறந்தது.[1]
மேற்கோள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Jones, Stanley D.; Wipff, Joseph K.; Montgomery, Paul M. (1997). Vascular Plants of Texas: A Comprehensive Checklist Including Synonymy, Bibliography, and Index. University of Texas Press. pp. 5–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-292-72962-9. Archived from the original on 10 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 7 July 2013.
- ↑ Davis, Elisabeth B.; Schmidt, Diane (1996). Guide to information sources in the botanical sciences (2. ed.). Englewood, Colo.: Libraries Unlimited. p. 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1563080753.
- ↑ 3.0 3.1 "Authors of Plant Names Where is the Brummitt & Powell "Authors of Plant Names" database?". Royal Botanic Gardens, Kew. பார்க்கப்பட்ட நாள் 7 July 2013.
- ↑ McNeill, J.; Barrie, F. R.; Buck, W. R.; Demoulin, V., eds. (2012), International Code of Nomenclature for algae, fungi, and plants (Melbourne Code), Article 46 (electronic ed.), Bratislava: International Association for Plant Taxonomy, archived from the original on 2013-09-27, பார்க்கப்பட்ட நாள் 2012-12-20