ஆத்திசூடி திறவுகோல்

ஆத்திசூடி திறவுகோல் என்னும் நூல் ஆத்திசூடி நூலின் பெருமையை உணர்ந்து போற்றிப் பாடும் நூல்களில் ஒன்று.
குறுமுனி என்பவரால் செய்யப்பட்டது.
இந்தக் குறுமுனி என்பவர் யார் என விளங்கவில்லை,

அ முதல் ஃ வரை உள்ள ஆத்திசூடி வருக்கக் கோவைக் அடி ஒவ்வொன்றையும் ஈற்றில் வரும்படி வைத்து ஒவ்வொன்றுக்கும் ஓர் எண்சீர் விருத்தப்பாடல் இந்த நூலில் பாடப்பட்டுள்ளது.
பாடலின் உட்பொருள் அந்த ஆத்திசூடியின் பொருளை விளக்குவதாக உள்ளது.

  • அறஞ்செய விரும்பு – என்பதற்கான பாடல்

அறனென்ற பொருளல்லால் உலகின் கண்ணே

அண்டருக்குத் தான்முனிவர் காணார் சூக்மம்

சரமென்று பெயர்பெற்று உலகில் தானும்

தனக்குள்ளே தானாகி அண்ட மாகிப்

பரமென்ற கீர்த்தியுள்ள சித்தர் யோகி

பரிவாக உச்சரித்து நமனை வெல்வார்

குருவென்றும் சீடரென்றும் கற்பம் என்றும்

குவலயத்தில் அறம்செய்ய விரும்பும் ஆச்சே.
  • இந்தப் பாடல் மிகவும் தாழ்ந்த நடையில் உள்ளது.
    • ஆத்திசூடி நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டு. இந்தத் திறவுகோல் நூலின் காலம் மிகவும் பிற்பட்டது. சொல்வதற்கில்லை.

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்திசூடி_திறவுகோல்&oldid=4131731" இலிருந்து மீள்விக்கப்பட்டது