ஆத்திசூடி பழையவுரைகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் பாடிய நீதிநூல்களில் மிகச் சிறிய அளவினைக் கொண்டதாக அமைந்துள்ள ஆத்திசூடி அறிஞர் உள்ளங்களைப் பெரிதும் கவர்ந்தது. இன்று வரையில் பல உரைகள் எழுதப்பட்டுவருகின்றன. அதற்குப் பழங்காலத்திலேயே எழுதப்பட்ட இரண்டு உரைநூல்கள் உள்ளன.
- இராமானுச கவிராயர் உரை
- 19-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. திருக்குறளை மேற்கோள் காட்டுவதற்காக வரிகூட மாற்றப்பட்டுள்ளது.
- வு, வூ, வொ, வோ எழுத்துக்கள் தமிழில் மொழிமுதல் எழுத்தாக வருவதில்லை. இதனைக் கருத்தில் கொண்டு
- அம்ம வுத்தமனாய் இரு
- அம்ம வூருடன் கூடிவாழ்
- அம்ம வொன்னாரைத் தேறேல்
- அம்ம வோரம் சொல்லேல்
- எனக் கூட்டி எழுதிக் காட்டியுள்ளார்.
- இராமானுச கவிராயர் உரைக்கு முந்தைய உரை
- திருக்குறள் மட்டுமன்றி, நாலடியார், புறநானூறு, கம்பராமாயடம், பகவத்கீதை, மாறனலங்காரம் ஆகிய நூல்களிலிருந்தும் தொடர்புடைய மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன.
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005