ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம்
ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம் (Australian Capital Territory, ACT) என்பது ஆத்திரேலியாவின் ஓர் உள்ளக நிலம்-சூழ் ஆள்புலம் ஆகும். ஆத்திரேலியாவின் தலைநகரான கான்பரா, இதன் எல்லைக்குள் அமைந்துள்ளது, கான்பரா இதன் முதன்மை நகரமாகும். தலைநகர ஆள்புலம் நியூ சவுத் வேல்ஸ் (நிசவே) மாநிலத்தால் சூழப்பட்ட தென்கிழக்கு ஆத்திரேலியப் பெருநிலப்பரப்பில் அமைந்துள்ளது. புதிய தேசத்திற்கான அரசாங்கத்தின் இடமாக கூட்டமைப்பிற்குப் பிறகு நியூ சவுத் வேல்சில் இருந்து விலக்கப்பட்ட ஆள்புலம், ஆத்திரேலிய நாடாளுமன்ற இல்லம், ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம், பல ஆத்திரேலிய அரச நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களை இது கொண்டுள்ளது.
ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம் Australian Capital Territory | |
---|---|
குறிக்கோள்: மன்னருக்கும், சட்டத்திற்கும், மக்களுக்கும் | |
நாடு | ஆத்திரேலியா |
பொதுநலவாயத்திற்கு மாற்றம் | 1 சனவரி 1911 |
பொறுப்புள்ள அரசு | 1988 |
தலைநகர் , பெரிய நகரம் | கான்பரா |
இடப்பெயரர் | ஆள்புலத்தான் |
அரசு | |
• மன்னர் | மூன்றாம் சார்லசு |
• ஆளுநர் | சாம் மோசுட்டின் |
• முதலமைச்சர் | ஆன்ட்ரூ பார் (தொழிற் கட்சி) |
சட்டமன்றம் | சட்டப்பேரவை |
நீதித்துறை | மீயுயர் நீதிமன்றம் |
ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் | |
• மேலவை | 2 மேலவை உறுப்பினர்கள் (மொத்தம் 76 இல்) |
3 இடங்கள் (151 இல்) | |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,358 km2 (910 sq mi) (8-ஆவது) |
• நிலம் | 2,358 km2 (910 sq mi) |
• நீர் | 0 km2 (0 sq mi) |
உயர் ஏற்றம் (பிம்பெரி உச்சி) | 1,912 m (6,273 ft) |
குறைந்த ஏற்றம் (முரும்பிட்சீ ஆறு) | 429 m (1,407 ft) |
மக்கள்தொகை | |
• மார்ச் 2022 மதிப்பு | 455,869[1] (7-ஆவது) |
• அடர்த்தி | 190/km2 (492.1/sq mi) (1-ஆவது) |
மொத்த மாநில உற்பத்தி | 2022 மதிப்பு |
• மொத்தம் | AU$45.318 பில்.[2] (6-ஆவது) |
• தலைக்கு | AU$102,334 (3-ஆவது) |
ம.மே.சு (2022) | 0.976[3] very high · 1-ஆவது |
நேர வலயம் | UTC+10:00 (ஆ.நே.) |
• கோடை (பசேநே) | UTC+11:00 (AEDT) |
அஞ்சல் குறியீடு | ACT |
ISO 3166 குறியீடு | AU–ACT |
சின்னங்கள் | |
பறவை | காங்-காங் கொண்டைக்கிளி[4] |
மலர் | ரோயல் நீலமணி[5] |
நிறம் | நீலமும் தங்கமும்[6] |
இணையதளம் | act |
1901 சனவரி 1 இல், ஆத்திரேலியக் குடியேற்றங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.[7] புதிய ஆத்திரேலிய அரசியலமைப்பின் பிரிவு 125 இன் படி, தலைநகருக்கான நிலம் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலும், சிட்னியில் இருந்து குறைந்தது 100 மைல் (160 கிமீ) தொலைவிலும் அமைந்திருக்க வேண்டும். இந்நிலம் புதிய ஆத்திரேலியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கப்படும். நியூ சவுத் வேல்சில் உள்ள பல்வேறு பகுதிகளின் விவாதம் மற்றும் ஆய்வுகளைத் தொடர்ந்து, 1908 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் இருக்கைக்கான சட்டம் 1908 இல் நிறைவேற்றப்பட்டது. இது யாஸ்-கான்பெரா பகுதியில் ஒரு இடத்தைக் குறிப்பிட்டது. 1913 ஆம் ஆண்டில் தலைநகரம் நிறுவப்பட்டு முறையாக கான்பரா என பெயரிடப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1911 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்சால் இந்த ஆள்புலம் கூட்டாட்சி அரசாங்கத்திற்கு மாற்றப்பட்டது.[8]
இவ்வாள்புலத்தின் வடகிழக்கில் உள்ள கான்பரா நகரில் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் அதே வேளையில், வில்லியம்சுடேல், ஓக்சு எஸ்டேட், உரியாரா, தர்வா போன்ற சில நகரங்களும் இந்தப் பிரதேசத்தில் உள்ளன. இங்கு நமட்கி தேசியப் பூங்காவும் அடங்கும், இது இவ்வாள்புலத்தின் பெரும்பகுதி நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இப்பகுதியானது ஒப்பீட்டளவில் வறண்ட, கண்டக் காலநிலையைக் கொண்டுள்ளது, மிகவும் சூடானது முதல் வெப்பமான கோடை காலமும், குளிர்ந்த முதல் குளிர்ச்சியான குளிர் காலமும் இருக்கும்.
நடுவண் அரசின் பல முக்கிய நிறுவனங்கள், தேசிய நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் இப்பகுதிக்கு சொந்தமானது. ஆத்திரேலிய நாடாளுமன்றம், ஆத்திரேலிய உச்சநீதிமன்றம், ஆத்திரேலிய பாதுகாப்பு படை கல்விக்கழகம், ஆத்திரேலியப் போர் நினைவுச்சின்னம் ஆகியவை இதில் அடங்கும். இது ஆத்திரேலியாவில் உள்ள பெரும்பாலான வெளிநாட்டுத் தூதரகங்கள், பல பன்னாட்டு நிறுவனங்களின் பிராந்திய தலைமையகங்கள், இலாப நோக்கற்ற குழுக்கள், பரப்புரை குழுக்கள், தொழில்முறை சங்கங்கள் போன்றவையும் இங்குள்ளன. ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழகம், கன்பரா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம், சார்ள்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வளாகங்களும் இங்கு அமைந்துள்ளன.
1988 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் இவாள்புலத்தை நிர்வகித்து வருகிறது. இருப்பினும், ஆத்திரேலிய அரசு இப்பிரதேசத்தின் மீது அதிகாரத்தை பராமரிக்கிறது, சட்டமன்றத்தில் உள்ளூரில் இயற்றப்படும் அனுமதிக்காமலோ அல்லது நீக்கவோ செய்யலாம். இவ் ஆள்புலத்தில் வசிப்பவர்கள் பிரதிநிதிகள் சபையின் மூன்று உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர், அத்துடன் ஜார்விஸ் குடா ஆள்புலத்தில் வசிப்பவர்களுடன் சேர்ந்து இரண்டு மேலவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
453,324 குடியிருப்பாளர்களுடன், இவ் ஆள்புலம் மக்கள்தொகை அடிப்படையில் இரண்டாவது சிறிய நிலப்பரப்பு மாநிலம் அல்லது ஆள்புலம் ஆகும். 2016 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், 15 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கான சராசரி வாராந்திர வருமானம் ஆ$998 ஆக இருந்தது, இது தேசிய சராசரியான ஆ$662 ஐ விட கணிசமாக அதிகம்.[9] இங்கு பட்டப்படிப்புத் தகுதியின் சராசரி நிலை தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. இவ் ஆள்புலத்தினுள், 37.1% மக்கள் (தேசிய சராசரி 20%) இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு மேல் கல்வி பெற்றவர்கள் ஆவர்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "National, state and territory population – March 2021". Australian Bureau of Statistics. 26 September 2022. Archived from the original on 21 November 2022. பார்க்கப்பட்ட நாள் 27 November 2022.
- ↑ "5220.0 – Australian National Accounts: State Accounts". Australian Bureau of Statistics. 20 November 2022. பார்க்கப்பட்ட நாள் 23 October 2023.
- ↑ "Sub-national HDI – Area Database". Global Data Lab (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-06.
- ↑ "Australian Capital Territory". Archived from the original on 5 March 2007. பார்க்கப்பட்ட நாள் 27 May 2007.
- ↑ Boden, Anne (23 May 2007). "Floral Emblem of the ACT". Archived from the original on 1 June 2007. பார்க்கப்பட்ட நாள் 27 May 2007.
- ↑ Time to Talk Canberra. "ACT Flags and Emblems". CMD.act.gov.au. பார்க்கப்பட்ட நாள் 17 July 2016.
- ↑ Birtles, Terry G. (2004). "Contested places for Australia's capital city" (PDF). 11th Annual Planning History Conference. Archived (PDF) from the original on 2022-10-09. பார்க்கப்பட்ட நாள் 8 April 2019.
- ↑ Fitzgerald, Alan (1987). Canberra in two centuries: A pictorial history. Clareville Press. pp. 4–5, 12, 92–93, 115, 128. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-909278-02-4.
- ↑ 9.0 9.1 Australian Bureau of Statistics (27 June 2017). "Australian Capital Territory". 2016 Census QuickStats. பார்க்கப்பட்ட நாள் 27 June 2017. This article contains quotations from this source, which is available under the Attribution International பரணிடப்பட்டது 16 அக்டோபர் 2017 at the வந்தவழி இயந்திரம் license.
வெளி இணைப்புகள்
தொகு- Government of the Australian Capital Territory
- Legislative Assembly of the Australian Capital Territory
- Supreme Court of the Australian Capital Territory
- Statistical Subdivisions of the Australian Capital Territory
- List of public art in Australian Capital Territory
- Geographic data related to ஆத்திரேலியத் தலைநகர ஆள்புலம் at OpenStreetMap