ஆந்திரமுடையார்
ஆந்திரமுடையார் என்பவர் இந்து சமய நாட்டார் தெய்வமாவார்.
தொன்மம்
தொகுகளைக்காட்டூரில் மாடன் நாயர் - பொன்னிலங்கி ஆகியோரின் மகனாக ஆந்திரமுடையார் பிறந்தார். இவரது வீரத்தினைப் பற்றி களைக்காட்டூர் மணியக்காரர் கேள்விப்பட்டு, சில இடங்களைத் தந்தார். அங்கு ஆந்திரமுடையார் தனி சமஸ்தானம் அமைந்தார். இவர் அழகும், வீரமும் நிறைந்து இருந்தவர் என்பதால் எண்ணற்றப் பெண்கள் இவரைத் திருமணம் செய்து கொள்ள முனைந்தார்கள். எனவே அவர்களிடமிருந்து தப்ப பொன்னிலங்கியின் அண்ணன் மகளை திருமணம் செய்தார்.
வேட்டைக்குச் சென்று திரும்பும்போது, அவருடைய மனைவி பகடையாடிக் கொண்டிருந்தார். தன்னை மதியாமல் இருக்கிறாள் என்ற கோபத்தில் அவளைக் கொன்றார். அதனால் அவ்வூரில் செல்வங்களை இழந்து வேறிடம் சென்றார். வள்ளியூரில் தங்கியபோது அங்கிருந்த பண்டாரத்தின் மகளான சின்னம்மாளை விரும்பி திருமண் செய்து கொண்டார். அங்கு சில திருடர்கள் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றனர். அவர்களைத் தேடி கண்டுபிடித்து செல்வங்களை மீட்டார். அதனால் ஊரார் மத்தியில் பெரும்புகழ் பெற்று கடவுளாக வழிபடப்படுகிறார்.
கோயில்கள்
தொகு- அருள்மிகு ஆந்திரமுடையார் திருக்கோயில் - வள்ளியூர் நெல்லை மாவட்டம்
நூல்கள்
தொகுவள்ளியூர் வரலாறு - சு. சண்முகசுந்தரம் காவ்யா பதிப்பகம் [1]
கருவிநூல்
தொகுஆந்திரமுடையார் கதை விக்கிமூலம்