ஆந்தை தும்பி

தட்டான்களை ஒத்த உருவ அமைப்பு இருந்தாலும் ஆந்தை தும்பிகள் பூச்சி இனத்தை சேர்ந்தவை. சுமார் 40 முதல் 60 மி.மீ. வரை வளரும். ஆந்தையின் கண்களை ஒத்த பெரிய உருண்டையான கண்களைக் கொண்டிருப்பதால் ஆந்தை தும்பி என்ற காரணப் பெயர் ஏற்பட்டுள்ளது. இறகுகள் உடலில் இருந்து கீழ் நோக்கி இருப்பதால், பறக்கும் வேகம் குறைவாக உள்ளது. இறகுகள் பழுப்பு நிறத்தில் ஊடுருவும் தன்மையோடு காணப்படுகின்றன.

கண்கள் பளபளக்கும் அடர் பழுப்பு நிறத்திலும் உடலின் மேற்பகுதி அடர் மணல் நிறத்திலும் கீழ்ப்பகுதி வெளிறிய மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இளமஞ்சள் நிற கால்களில் அரம் போன்ற செதில்கள் தென்படுவதோடு உடலின் மேற்பகுதியோடு மெல்லிய சிறிய மென்மையான முடிக் கற்றைகள் காணப்படுகின்றன. இளமஞ்சள் நிறத்தில் நீண்டு மெலிந்த உணர்கொம்புகளின் நுனியில் அடர் பழுப்பு நிறத்தில் சற்று உருண்டையாக காணப்ப்டுகிறது.பகலில் ஓய்வெடுத்து மாலை வேளைகளில் சுற்றித்திரிந்து பூவில் உள்ள தேனை உணவாகக் கொள்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்தை_தும்பி&oldid=2638636" இலிருந்து மீள்விக்கப்பட்டது