ஆன்ட்ரூசோவ் செயல்முறை வினை

ஆன்ட்ரூசோவ் செயல்முறை வினை (Andrussow process) என்பது ஆக்சிசன் மற்றும் பிளாட்டினம் வினையூக்கியின் முன்னிலையில் மீத்தேன் மற்றும் அம்மோனியாவில் இருந்து ஐதரசன் சயனைடு உற்பத்தி செய்யும் தொழிற்துறை செயல்முறை வினையாகும்[1][2]

பிந்தைய 1930: ஐதரசன் சயனைடு சோதனை உற்பத்திக்கான ஆன்ரூசோவ் செயல்முறையின் பகுதி தொழில்நுட்பத் திட்டம். இடம் - எர்னே, செருமனி, இயக்குபவர் லியோனிட் ஆன்ரூசோவ்.
ஆன்ரூசோவ் செயல்முறை விளக்கப் படம்
CH4 + NH3 + 1.5 O2 → HCN + 3 H2O

பக்க வினைகள் தொகு

இந்த வினை அதிகமான அளவில் வெப்பம் உமிழும் வினையாகும். இவ்வினையின் உள்ளுறை வெப்ப மாற்றம் -481.06 கிலோசூல்[3] இவ்வினையில் வெளிப்படும் வெப்பம் ஏனைய பக்க வினைகள் நிகழ வினையூக்கியாக செயல்படுகிறது.

CH4 + H2O → CO + 3 H2
2 CH4 + 3 O2 → 2 CO + 4 H2O
4 NH3 + 3 O2 → 2 N2 + 6 H2O

மேற்கண்ட இந்த பக்க வினைகளை 0.0003செ என்ற குறைவான அளவில் வெளியேறு வெப்பத்திற்கு உட்படுத்துவதன் மூலமாக குறைக்க முடியும்.[4]

வினையின் அடிப்படையிலான இச்செயல்முறை 1927 ஆம் ஆண்டில் லியோனிது ஆந்திரூசொவ் என்பவரால் கண்டறியப்பட்டது. அடுத்த ஆண்டில் அவர் இச்செயல்முறையை விரிவு படுத்தினார். இதனால் அவ்வினை அவருடைய பெயரான ஆன்ட்ரூசோவ் வினை என்று அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Leonid Andrussow (1927). "Über die schnell verlaufenden katalytischen Prozesse in strömenden Gasen und die Ammoniak-Oxydation (V)". Berichte der deutschen chemischen Gesellschaft 60 (8): 2005–2018. doi:10.1002/cber.19270600857. 
  2. L. Andrussow (1935). "Über die katalytische Oxydation von Ammoniak-Methan-Gemischen zu Blausäure (The catalytic oxidation of ammonia-methane-mixtures to hydrogen cyanide)". Angewandte Chemie 48 (37): 593–595. doi:10.1002/ange.19350483702. 
  3. Deák, Gyula (1980), Menné reakcie v organickej chémii, Bratislava: Vydavateľstvo technickej a ekonomickej literatúry, p. 14
  4. Pirie, J M (1958). "The Manufacture of Hydrocyanic Acid by the Andrussow Process". Platinum Metals Rev. 2 (1): 7–11. http://www.platinummetalsreview.com/pdf/pmr-v2-i1-007-011.pdf. பார்த்த நாள்: 28 March 2014.