ஆன்னி வாக்கர்

ஆங்கிலேய வானியலாளர்

ஆன்னி வாக்கர் (Anne Walker) ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். பிரித்தானியவிலேயே வானியலில் சம்பளத்துக்கு அமர்த்தப்பட்ட முதல் பெண்மணி இவரே ஆவார்.[1] இவர் 1876 முதல் 1904 வரை கேம்பிரிட்ஜ் வான்காணகத்தில் அமர்த்தப்பட்ட மாந்தக் கணிப்பாளர்களில் ஒருவராவார். பிற பெண்மணிகளைப் போல்ல்லாமல், இவர் வான்காணகத்தில் நெடுங்காலம் வரை பணிபுரிந்தார்.

ஆன்னி வாக்கர்
பிறப்பு1864
விக்காம் அங்காடி, சுப்போக்
தேசியம்பிரித்தானியர்
அறியப்படுவதுவானியல்
கேம்பிரிட்ஜ் வான்காணக கடப்பு வட்ட ஒளிப்படம். தாமசு குக்கும் சன் வர்க்சாப்பும், யார்க், 1870. இந்த தொலைநோக்கியைத் தான் ஆன்னி வாக்கர் தனது ஆவணப்படுத்திய நோக்கீடுகளுக்குப் பயன்படுத்தினார்.

இவர் 1864 இல் சுப்போக்கில் உள்ள விக்காம் அங்காடியில் பிறந்தார்.[2][3] இவர் 1879 இல் தன் 15 ஆம் அகவையில் வான்காணகத்தில் பணியில் சேர்ந்து 24 ஆன்டுகல் பணிபுரிந்துள்ளார்.ஆப்போது இவர் ஜான் கவுச் ஆடம்சு, இராபெர்ட் சுட்டாவெல் பால் ஆகியோரிடம் பணிபுரிந்துள்ளார். அப்போது இவர் வான்காணகத்தின் முதுநிலை உதவியாளராகிய வானியலாளர் ஆந்திரூ கிரகாமிடம் நேரடியாக வேலை செய்துள்ளார். வான்காணகத்தில் இருவர் மட்டுமே நோக்கீடு செய்யமுடியும். எனவே வாக்கர் கிரகாமின் நடப்பு உதவியாளராகிய என்றி தோடு உடல்நலிவால் நின்றதும் அவருக்குப் பதிலாக நோக்கிடுகலைச் செய்யலானர்.[2] இவர் 1880 களில் வான்கோள கிடைப் பெருவட்டங் கடப்பு நோக்கீடுகளைப் பதிவு செய்துள்ளார். இது 1884 ஆம் ஆண்டைய வான்காணக அறிக்கயில் இருந்து தெரியவருகிறது. இவ்வறிக்கை 1884 ஏப்பிரல் 22 இல் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டபோது கண்ணருகு வில்லையின் கம்பிகள் அதிர்ந்தமையால் சிறுது காலம் நோக்கிடுகளை நிறுத்த நேர்ந்துள்ளதென கூறுகிறது.[4] இவர்1892 இல் இருந்து கிரகாமின் நோக்கீடுப் பங்காளர் ஆனார். இவர் 1894 முதல் 1896 வரை தானே தனியாக நோக்கிடுகளைப் பதிவு செய்தார்.[2][5]

கேம்பிரிட்ஜ் வான்காணக கடப்பு வட்ட ஒளிப்படம், ஏப்பிரல் 1896. வானியலாளர் அங்கே முதுநிலை உதவியாளராக இருந்த ஆந்திரூ கிரகாமே ஆவார். இவருடன் ஆன்னி வாக்கர் நேரடியாகப் பணிபுரிந்துள்ளார்

ஆந்திரூ கிரகாம் 1903 இல் தனது 88 ஆம் அகவையில் ஓய்வு பெற்றார். இதே நேரத்தில் ஆன்னி வாக்கரும் கேம்பிரிட்ஜ் வான்காணகத்தில் 21 ஆண்டுகள் பணிக்குப் பின்னர் ஓய்வு பெற்றார்.[2][6]

இவர் வழக்கமான[1] கணிப்பாளராக மட்டுமன்றி, கிரகாமுடன் இணைந்து நோக்கீட்டிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது உண்மையானால், கரோலின் எர்ழ்செலுக்குப் பிறகு இரவுநேர நோக்கிட்டில் ஈடுபட்ட இரண்டாம் பெண்மணி இவரே ஆகிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Mary Brück (2009). Women in Early British and Irish Astronomy. Springer. பக். 214. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-481-2472-5. 
  2. 2.0 2.1 2.2 2.3 Hutchins, Roger. "Andrew Graham". Oxford Dictionary of National Biography. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 25 November 2012.
  3. WICKHAM MARKET GENEALOGY Retrieved 2016-10-12.
  4. "Cambridge Observatory". Monthly Notices of the Royal Astronomical Society 45 (4): 223–224. 1885. doi:10.1093/mnras/45.4.223. Bibcode: 1885MNRAS..45..223.. 
  5. See page 89 in Frank Arthur Bellamy (1912). "Note on the Cambridge Magnitude Equation". Monthly Notices of the Royal Astronomical Society 73 (2): 88–90. doi:10.1093/mnras/73.2.88. Bibcode: 1912MNRAS..73...88B. 
  6. Robert Stawell Ball (1904). "Cambridge Observatory". Monthly Notices of the Royal Astronomical Society 64 (4): 315–316. doi:10.1093/mnras/64.4.315. Bibcode: 1904MNRAS..64..315.. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்னி_வாக்கர்&oldid=3316430" இலிருந்து மீள்விக்கப்பட்டது