ஆபே டூபே
ஆபே டூபே (Abbe J. A. Dubois 1770-1848) ஒரு பிரெஞ்சுக்காரர். இந்துக்களின் பழக்க வழக்கங்களும் சடங்குகளும் என்னும் நூலை எழுதியவர். பிரெஞ்சுப் புரட்சி நிகழ்ந்த காலகட்டத்தில் கிறித்தவ சமயத்தைப் பரப்பும் நோக்கில் இந்தியாவிற்கு வந்தார். இந்தியாவில் தக்கணத்திலும் தமிழ்நாட்டிலும் 30 ஆண்டுகளுக்கு மேல் பயணம் செய்தவர். வடமொழியையும் தமிழையும் நன்கு கற்று அறிந்தார்.
French missionary | |
பிறந்த நாள் | 10 சனவரி 1766 Saint-Remèze |
---|---|
இறந்த நாள் | 17 பெப்பிரவரி 1848 பாரிசு |
குடியுரிமை நாடு | |
இந்துக்களின் பழக்க வழக்கங்களும் சடங்குகளும்[1] என்னும் இவர் எழுதிய நூல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரவி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. 19 ஆம் நூற்றாண்டு இந்திய வாழ்க்கை நிலைமைகளை விளக்கியுள்ளார். இந்து மதம் பற்றியும் சாதிய அமைப்பு முறை பற்றியும் சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், திருமணம், சாவு, விதவைகள், இலக்கியம் போன்றன பற்றியும் ஆய்வு செய்து விரிவாக எழுதியுள்ளார். இந்நூல் முதலில் 1806 இல் பதிப்பாகி வெளி வந்தது.
32 ஆண்டுகள் அவர் இந்தியாவில் வாழ்ந்து விட்டுத் தம் தாய் நாட்டுக்குத் திரும்பினார். ஆபேயின் கடைசிக் காலம் பாரிசில் கழிந்தது. இந்து மதக் கதைகள் கொண்ட பஞ்சதந்திரம் என்னும் நூலை பிரெஞ்சு மொழியில் மொழி ஆக்கம் செய்தார்.
உசாத்துணை
தொகு- ↑ Dubois, Jean-Antoine; Book, Start this. "Hindu manners, customs and ceremonies". பார்க்கப்பட்ட நாள் 2019-11-21.
- பெரியார் சிந்தனைகள் தொகுப்பு --வே.ஆனைமுத்து